பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


பண்பு 2: ஒர் அணிக்கோவையில் ஏதேனும் இரு நிரைகள் அல்லது நிரல்கள் பரிமாற்றம் பெறின், அணிக்கோவை யின் மதிப்பின் குறி மாறும். பண்பு 3 ஒர் அணிக்கோவையில் ஏதேனும் ஒரு நிரையில் அல்லது நிரலில் உள்ள ஒவ்வொரு மூலத்தையும் K என்னும் ஒரு சுழி எண்ணால் பெருக்க, அணிக்கோவை யின் மதிப்பு Kஆல் பெருக்கப்படும். இப்பண்புகளின் பயன் யாது? அணிக்கோவையின் மதிப்பைக் காணப் பயன்படுபவை. தவிர, மூன்றாம் வரிசை அணிக்கோவையின் பண்புகள் அனைத்து வரிசை அணிக்கோவைகளுக்கும் பொருந்து வது ஆகும்.

11 சார்பும் கணமும்

சார்பு என்றால் என்ன? புள்ளியியல் மாதிரியின் பண்பு. முழு மக்கள் தொகையினையும் குறிக்க இயலாதவாறு மாதிரியைச் செய்வது. காட்டாக, ஒரு மருத்துவமனையில் நோயாளி களை அளவை செய்து, அதன் அடிப்படையில் மருத்துவத் தகவல்கள் திரட்டப்பட்டால், அம்மாதிரி பொதுமக்கள் தொகையின் சார்புடைய மதிப்பீடு ஆகும். ஏனெனில், உடல் நலமுள்ள மக்கள் இதில் விலக்கப் படுகிறார்கள்.

சார்பின் பல வகைகள் யாவை?

1. மெய்ச்சார்பு 2. தனிச் சார்பு 3. இருநிலைச் சார்பு 4. இயைபுச் சார்பு 5. நிலைச் சார்பு 6. சமச்சார்பு

7. முற்றொருமைச் சார்பு 8. செலுத்தும் சார்பு 9. மீப்பெருதொகைச் சார்பு 10. நேர்மாறு சார்பு

11. எதிர்மாறல் சார்பு 12. பல்லுறுப்புச் சார்பு 13. வீதமுறு சார்பு 14. தொடர்சார்பு 15. உள்நோக்கிய சார்பு 16. வட்டச் சார்பு

17. மேல்நோக்கிய சார்பு 18. தொடர்பற்ற சார்பு