பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.

28.

29.

30.

113

மெய்யறிவியலின் ஒரு பிரிவு தருக்கம். சரியான பகுத்தறிதலின் விதிகளைப் பற்றி இது ஆராய்வது. இது தொடர்பாகக் குறியீட்டுத் தருக்கத்தைக் கணக்கறிஞர்கள் உருவாக்கியுள்ளனர். இத்தருக்கம் என்பது முறையான பகுத்தறிமுறையாகும். கணக்குக் குறியீடுகளையும் முறைகளையும் பயன்படுத்துவது. கணக்கியலில் பல குறியீட்டுத் தருக்க முறைகளை உருவாக்கியுள்ளனர். இவை கணிப்பொறி வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுபவை. தொகுத்தறிதல், பகுத்தறிதல் முதலியவை கணிதத்தில் பயன்படுபவையே. கணத்தைக் குறித்தல் என்றால் என்ன? கணம் என்பதைக் குறியீட்டில் எழுத, அக்கணத்தின் உறுப்புகளை இரு தலை அடைப்பிற்குள் எழுத வேண்டும். இவ்வாறு எழுதும் முறைக்குப் பட்டியல் அமைப்பு முறை என்று பெயர். இம்முறையில் எழுதும்பொழுது பலமுறை வரும் உறுப்புகளை ஒரே

ஒரு முறைதான் எழுதவேண்டும். எ-டு. ΜΑΤΗΕΜΑΤΙΟS

M= [MATE,I,C,S]

மாதிரி எடுத்தல் என்றால் என்ன? முழுத் தொகையிலிருந்து பெயரளவு உட்கணத்தைத் தேர்ந்தெடுத்தல். இம்மாதிரியைப் பகுக்க, முழுத்தொகை பற்றிய செய்தியளிக்கும். இது புள்ளிஇயல் உய்மானம் எனப்படும். மாதிரி எடுப்புப் பரவல் என்றால் என்ன? மாதிரிப் புள்ளிவிவரத்தைப் பரவுமாறு செய்தல். எ-டு. n அளவுள்ள வேறுபட்ட மாதிரிகள் ஒரே அளவு தொகையிலிருந்து எடுக்கப்படும் பொழுது, ஒவ்வொரு மாதிரியின் வழிவகைகள் மாதிரி எடுப்புப் பரவலைத் தோற்றுவிக்கும். இரு கணங்களின் சேர்ப்பு என்றால் என்ன? A மற்றும் B என்பவை இரு கணங்கள் என்றால், AUB (A சேர்ப்பு B) என்பது A யிலுள்ள அல்லது B யிலுள்ள

gs.8.