பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10



இடையே உள்ள தொடர்புகள் பற்றியும் ஆராய்வது. அதன் பல முறைகளும் செயல்களும் பாமரன் அறிவுக்கு எட்டாதது. ஆனால், அதன் மெய்யறி இயல்பும் முறைமையும் அப்படியல்ல.
6.கணிதத்தில் ஒர் அடிப்படை முறைக்கு மேல் ஏதாவது ஒன்று உண்டா?
இல்லை. அதற்குப் பல பிரிவுகளும் தனிக் கருத்துகளும் உண்டு. ஒரே மொழியும் முறையமையும் செயலும் மட்டுமே உண்டு. இதற்குக் காரணம் இயற்கை விதிகளை அது பகுப்பதும் விளக்கம் அளிப்பதுமே ஆகும். இவ்விரண்டு மட்டுமே ஒரு தனி ஒன்றிப்புள்ள முறையில் பகுதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
7.கணிதம் என்னும் கலை எவ்வாறு தோன்றியது?
எண்ணுவதில் இருந்து அது தொடங்கியது. குகை மனிதன் அளவை அறிந்திருந்தான். அதாவது ஒர் எண்ணை மற்றொரு எண்ணிலிருந்து வேறுபடுத்தி அறிந்தான். எத்தனை முயல்களைக் கல்லெறிந்து கொன்றான் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு குழந்தைக்கும் ஐந்து குழந்தைக்கும் உள்ள வேறுபாடு அவனுக்குத் தெரியும். எத்தனை.பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதையும் அவன் அறிவான். எண்ணுதல் என்பது எளியதும் மிக அடிப்படையானதுமான கருத்து. தற்கால சிக்கலான கணினிகளும் செய்யும் வேலை எண்ணுதலே. அதை அவை விரைவாகச் செய்யும். அவ்வளவே. சிக்கலைத் தீர்க்கும். ஏன், விலங்குகளுக்குக்கூட எண்ணக் கற்றுக் கொடுக்கலாம். ஆகவே, எண்ணுவதில் தொடங்கியதே கணிதம்.
8.கணிதத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?
தூய கணிதம், பயனுறுகணிதம்.
8.தூய கணிதம் என்றால் என்ன?
அடிப்படைக் கணிதம். கணிதக் கொள்கை, அமைப்புகள் ஆகியவற்றை ஆராய்வது. மனத்தில் பயனைக் கருதாது ஆராய்வது. எ-டு திசைச்சாரிகளின் பொதுப் பண்புகளை ஆராய்தல்.