பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

120

-

வரிசைப்படுத்தும் முறை. எ-டு. 10 பேரை உயரப்படி வரிசைப்படுத்தல். வரிசை இணை என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட வரிசையிலுள்ள இரு மாறிகளின் மதிப்புகளைக் காட்டும் இரு எண்கள். எ-டு. இரு பருமக் கார்ட்டீசியன் ஆயங்களிலுள்ள xyஆயப்புள்ளிகளில்xy என்னும் வரிசையுள்ள கணத்தைத் தோற்றுவிப்பது. சுற்றுக்காலச் சார்பு என்றால் என்ன? மாறியின் ஒழுங்கான இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் வரும் சார்பு. எ-டு. xஇன் காலநிகழ்சார்பு sinx. ஏனெனில், sin x = sin (x + 21) xஇன் எல்லா மதிப்புகளுக்கும் பொருந்துவது. ஏறுபடி என்றால் என்ன? ஒரு மாறியிலுள்ள சிறிய வேறுபாடு. எ-டு. x மதிப் பிலிருந்து x மதிப்புக்கு ஏறுபடி Ax மூலம் மாறுவது. நுண்கணிதத்தில் முடிவிலாச் சிறு ஏறுபடிகள் பயன் படுபவை. ஒன்றுவிட்ட துண்டு என்றால் என்ன? ஒன்றுக்கு மற்றொன்று மாறும் துண்டு. மாறுசார்பலன் என்றால் என்ன? இரண்டிற்கு மேற்பட்ட மாறிகளின் சார்பலன். வேறுபெயர் எதிர்ச்சமச்சீர் சார்பலன். ór-G. f(x,yz)=-f(ух,z). மாறுதொடர் என்றால் என்ன? உறுப்புகள் மாறிமாறி மிகையாகவும் குறையாகவும் உள்ள வரிசை. எ-டு Sn=-1+1, -1,+1... + (1) . இது ஒரு குவிதொடர். மாற்றீடு செய்தல் என்றால் என்ன? ஒரு சமனி மற்றொரு சமனிக்குச் சார்பாக ஒரு மாறியை பதிலீடு செய்தல். இது இயற்கணிதச் சமன்பாடுகளைத் தீர்க்கும் முறை ஆகும். எ-டு. x+y= 4

2x+y=9