பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.

26.

27.

28.

29.

123

4. எவ்வடிமானத்தின் சுழி மடக்கை 0. மடக்கை வகைக்கெழு காணல் என்றால் என்ன? கொடுக்கப்பட்ட சார்புக் காரணிகளையும் மூலக் குறிகளையும் கொண்டிருக்கும்பொழுது, முதலில் மடக்கை எடுப்பதும் பின் வகைக்கெழு காண்பதும் வழக்கம். இம்முறையே மடக்கை வகைக்கெழு காணல் என்பது.

மடக்கைச் சார்பு என்றால் என்ன? log, Xஇன் சார்பு. இங்கு a என்பது ஒரு மாறிலி. x, இன் நேரிடை மதிப்புகளுக்கு வரையறை செய்யப்படுவது. மடக்கை அளவுகோல் என்றால் என்ன? ஒரு கோட்டில் x என்னும் தொலைவு, பார்வைப் புள்ளியிலிருந்து ஒரு எண்ணின் மடக்கைக்கு நேர்வீதத்திலிருக்கும். எ-டு. கோடு நெடுகவுள்ள ஓரலகு நீளம் 10, இரு அலகுகள் 100, மூன்று அலகுகள் 1000.

(3) திசைச்சாரி

திசை என்றால் என்ன? திசைச்சாரி. அளவுகளின் பண்பு. நிலையான தொடக்கப் புள்ளி மற்றும் அச்சுகள் தொடர்பாக வழக்கமாக வரையறுக்கப்படுவது. ஒரு புள்ளியில் வளைகோட்டின் திசை, அப்புள்ளியின் அச்சிலிருந்து தொடுகோடு வரையுள்ள கோணமாகும். திசைச்சாரி (வெக்டார் என்றால் என்ன? திசையையும் அளவையுங் கொண்டது. எ-டு. திசைவிரைவு, முடுக்கம். இதைக் குறிக்கத் திசைக் கோடிட்ட நேர்கோட்டுத் துண்டினைப் பயன்படுத்து கிறோம்.

எ-டு. AB என்பது A யிலிருந்து B க்கு என்னும் திசையை யும் AB என்னும் அளவையும் கொண்ட திசைச்சாரி.

என்னும் குறியீடு திசைச்சாரியின் நீளத்தைக் குறிக்கும். இதை அந்தந்த திசைச்சாரியின் எண்ணளவு அல்லது மட்டு என்கிறோம்.