பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

10.பயனுறுகணிதம் என்றால் என்ன?
சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கணித நுட்பங்களை ஆராய்தல். எத்துறையிலும் பயன்படுவது கணிதம். சில எடுத்துக்காட்டுகள்.
1. கோடுகள், புள்ளிகள், கோணங்கள் முதலியவற்றை ஆராய்வது தூய வடிவ கணிதம்.
2. யூக்ளிட் வடிவ கணிதம் நில அளவை, கட்டிடக் கலை, கப்பல்போக்குவரத்து, வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் பயன்படுவது. ஆகவே, இது பயனுறு வடிவ கணிதம் எனப்படும். இச்சொல் சிறப்பாகப் பயனுறு விசையியலுக்குரியது.
3. விசைகளுக்குரிய சிக்கல்களைத் தீர்க்க உதவும் திசைச்சாரி இயற்கணிதம் பயன்படு கணிதமாகும்.
11.கணிதத்தின் முக்கியப் பிரிவுகள் யாவை?
எண் கணிதம், இயற்கணிதம், வடிவ கணிதம், முக்கோண வடிவ கணிதம், நுண்கணிதம் எனப் பல வகை.
12.எண் கணிதம் (arithmetic) என்றால் என்ன?
இது எண் கருத்துகள் பற்றியும் எண்ணுவதின் பலவகைகள் பற்றியும் ஆராய்வது. உயர் கணிதத்தில் இதன் பங்கு சிறப்புள்ளது. எண்களைக் கையாள்வதற் குரிய திறன்கைள ஆராய்வது. எண்சார் செய்தியுள்ள சிக்கல்களைத் தீர்க்க இத்துறை உதவுவது.இதனால் எண் தொகுதி மதிப்பை அறியலாம். எண்களை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்ற இயலும். எ-டு. பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுதல்.
13.எழுத்து வடிவ எண்கள் எவ்வாறு தோன்றின?
நம் ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் உள்ளன. இவற்றைக் கொண்டே எனணும் முதல் முறை தோன்றியது. எண்குறிபாடுகளை அரபு அறிஞர்களும் இந்திய அறிஞர்களும் உருவாக்கினர். இவை இன்றும் உலகம் முழுதும் பயன்படுகின்றன. இதற்கு அவர்கள் 10 தனித்த எண்களைத் தேர்ந்தெடுத்ததே, அவர்களின் அறிவாற்றலைக் காட்டுகிறது. அது சுழியிலிருந்து