பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13.

14.

15.

16.

17.

18.

19.

20.

152

ஒர் ஆயத் தொகுதி அல்லது பரப்பிலுள்ள இடம். இதற்குப் பருமன் இல்லை. அதன் நிலையால் மட்டுமே வரையறுக்கப்படுகிறது.

குறித்தல் என்றால் என்ன? ஆயங்களில் புள்ளிகளைக் குறிக்கும் முறை அல்லது புள்ளிகளைக் குறித்து வரைபடம் வரைதல். ஆயங்கள் (coordinates) என்றால் என்ன? ஒரு புள்ளி அல்லது புள்ளித் தொகையை வரையறை செய்யும் எண்கள். இவற்றில் ஆதி புள்ளி (O) என்னும் புள்ளியும் அச்சுகள் என்னும் நிலையான கோடுகளும் (x,y) ஒப்பீடாகப் பயன்படுபவை. ஆயமுறையின் வகைகள் யாவை? 1. கார்ட்டீசியன் ஆய முறை. o 2. கோன ஆயமுறை. ஆயத்தொலை ஆர்டினேட் என்றால் என்ன? குத்தாயம். இரு பருமச் செவ்வகக் கார்ட்டீசியன் ஆயத் தொகுதியில் செங்குத்து அல்லது y-ஆயம். மட்டாயம் என்றால் என்ன? கிடையச்சுத் தொலைவு. ஆயத்தொலைகளின் அச்சுக்குச் செங்கோணத்திலுள்ள அச்சின் நீளம். கார்ட்டீசியன் ஆயங்கள் என்றால் என்ன? இரண்டிற்கு மேற்பட்ட நேர்க்கோடுகளின் திசையில் ஆதி புள்ளியிலிருந்து அமையும் தொலைவின் மூலம் ஒரு புள்ளியின் நிலையை வரையறை செய்யும் முறை. ஒரு தட்டைப் பரப்பில் x அச்சு, y அச்சு என்னும் இரு நேர்க்கோடுகள் இரு பருமக் கார்ட்டீசியன் ஆயத் தொகுதியின் அடிப்படையைத் தோற்றுவிப்பவை. கோடுகள் கடக்கும் புள்ளி ஆதிபுள்ளி. இந்த ஆயங்களில் பயன்படும் இரு முறைகள் யாவை? 1. வலக்கை முறை. 2. செவ்வக முறை. உருளை கோண ஆயங்கள் என்றால் என்ன? இடத்தில் ஒரு புள்ளியின் நிலையை வரையறை செய்யும்