பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.

37.

58.

39.

136

பயன்படுபவை. 3.சிதறல் படங்கள் ஒர் அறிவியல் ஆய்வின் முடிவுகளைப் பகுத்துப் பார்க்கப் பயன்படுபவை. லாக் ஒரு படி வரைபடம் என்றால் என்ன? அரைமடக்கை வரைபடம். ஒர் அச்சு மடக்கை மதிப்பையும் ஒரு படி அளவு கோலையும் கொண்ட வரைபடம். - லாக்-லாக் வரைபடம் என்றால் என்ன? இரு அச்சுகளுக்கும் மடக்கை அளவுகோல்களைக் கொண்ட வரைபடம்.

வரைபட வரலாறு யாது? டேகார்ட் என்பவர் பிரஞ்சு கணித மேதை. இவர் படங்களைப் பற்றிச்சிந்தித்தவர். இவர் உடல்நலமின்றிப் படுக்கையில் இருந்த பொழுது, அறையின் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் இரு விரிசல்கள் இருந்தன. அவை இரண்டும் நேர்க்கோடுகளாகவும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகவும் அமைந்தன. ஓர் ஈ அக்கூரையில் விரிசல்கள் சேரும் புள்ளியில் அமர்த்திருந்தது. பின்னர் அந்த ஈ.வெவ்வேறு இடங்களில் அமர்ந்தது. இவர் அந்த ஈ அமர்ந்த இடங்களை எல்லாம் தம் மனத்தில் இருத்திக் கொண்டார். விரிசல்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஈ அமர்ந்த இடத்திற்கான தொலைவை அறிந்தால், அதன் இருப்பிடத்தை அறிய இயலும் என இவர் முடிவு செய்தார். உடல் நலம் தேறியவுடன் மீண்டும் சிந்தனையை ஒட விட்டார். விளைவு செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் இரு நேர்க்கோடுகளை அடிப்படையாகக் கொண்டு வரைபடக் கணக்குத் துறையை நிறுவினார்.அக்கோடுகள் வெட்டும் புள்ளி ஆதிபுள்ளி எனவும் இவ்விரு கோடுகளும் டேகார்ட்டின் பெயரால் கார்ட்டீசியன் அச்சுகள் என்னும் பெயர் பெறுகின்றன. வளைவு என்றால் என்ன? வளைகோடு நெடுகவுள்ள தொலைவுத் தொடர்பாக, வளைகோட்டின் தொடுகோட்டுச் சாய்வில் ஏற்படும்