பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

139

எப்பொழுதும் ஏனைய இரண்டின் கூட்டுத் தொகையை விடக் குறைவாக இருக்கும்.

AB < BC + CA. திசைச்சாரி முக்கோணம் என்றால் என்ன? மூன்று ஒரு தளத் திசைச் சாரிகளில் குறிக்கப்படும் முக் கோணம். திசைச்சாரிகள் சுழி தொகுபயனுள்ள புள்ளியில் செயல்படும். சரியான அளவிலும் திசையிலும் அளவுத் திட்டப்படி வரைய, அவை ஒரு மூடிய முக்கோணத்தை உண்டாக்கும். ஆக, மூன்று விசைகள் சமநிலையில் ஒரு பொருளில் செயற்படும் பொழுது, விசை முக்கோணத்தை உண்டாக்குகின்றன. அதேபோல, நேர்விரைவு முக் கோணத்தை அமைக்கலாம். முக்கோணவியல் வரலாறு யாது? இப்பர்கஸ் (கிமு.140) என்னும் கிரேக்க வானவியல் அறிஞர் முக்கோணவியலின் தந்தை. நம் நாட்டில் ஆரியபட்ட, பிரமகுப்த முதலிய கணக்கறிஞர்கள் இவ்வியலை வளர்த்துள்ளனர். எகிப்தியர்களுக்கும் இவ்வறிவு இருந்தது. முக்கோணவியல் என்னுதலைப்பை பி (1561 - 1613) என்னும் கணித அறிஞர் முதன் முதலில் பயன்படுத்தினர். கோள முக்கோணவியல் என்றால் என்ன? கோள முக்கோணங்களை ஆராய்தலும் அவற்றிற்குத் தீர்காணலும். கோளகம் (spheroid) என்றால் என்ன? ஒரு பொருள் அல்லது வளைபரப்பு கோளத்தை ஒத்தது. ஆனால், ஒரு திசையில் சுருங்கியோ நீண்டோ இருக்கும். முக்கோணவியலின் பயன்கள் யாவை? இவ்வியல் வானவியல், நில அளவை, கப்பல் ஒட்டுதல், பொறியியல் முதலிய துறைகளின் பயன்படுதல். முக்கோண எண்கள் என்றால் என்ன? முக்கோணப் புள்ளி அடுக்குகளால் உருவாக்கப்படும் எண்களின் (1, 3, 6, 100, . . ) கணம். முந்திய அடுக்கை விட ஒர் அடுக்கைக் கூடுதலாகக் கொண்டிருக்கும்.