பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.

28.

29.

30.

31.

32.

35.

34.

35.

145

பகுதி அத்தண்டின் மற்றொரு பகுதிக்குச் சார்பாகத் திருகப்படுவதால் ஏற்படுங் கோணம். நிலைநிறுத்தியமைக்கும் கோணம் என்றால் என்ன? வானூர்தியின் இறுக்கக்கோட்டிற்கும் நிலைப்பு நானுக்கும் இடையிலுள்ள குறுங்கோணம். மரைக்கோணம் என்றால் என்ன? அச்சுத்தளத்தில் அளக்கப்பட்ட மரையின் இரு பக்கங் களுக்கு இடையே அமையும் கோணம். சிறகமைகோணம் என்றால் என்ன? வானூர்தியின் இறுக்கக் கோட்டிற்கும் சிறகு நாணின் தளத்திற்கும் இடையிலுள்ள குறுங்கோணம். திரும்புகோணம் என்றால் என்ன? ஒரு வானூர்தியின் சமச்சீர் தளத்திற்கும் சார்புக் காற்றுத் திசைக்கும் இடையிலுள்ள கோணம். இரு வட்டங்களுக்கிடையே உள்ள கோணம் என்றால் என்ன? இக்கோணம் இரு வட்டங்கள் வெட்டும் புள்ளியில் அவைகளுக்கு வரையப்படும் தொடுகோடுகளுக்கு இடையே உள்ள கோணம் ஆகும். அனைத்துச் சமக் கோணம் என்றால் என்ன? அனைத்து நிலைகளிலும் ஒன்றாக இருப்பது. பண்பேற்றக் கோணம் என்றால் என்ன? நிலையான ஊர்தி அதிர்வெண்ணின் கட்ட கோணத்தை மாற்றும் செலுத்து குறிகையுள்ள தொகுதி. அதாவது கட்டப்பண் பேற்றமும் அதிர்வெண் பண்பேற்றமும் ஆகும்.

எதிர்கோணம் என்றால் என்ன? குறைகோணம். கதிரின் சுற்று, கடிகாரமுள்ளின் திசையில் இருப்பது.

பிடிப்புக் கோணம் என்றால் என்ன? உலோகத்தை உருட்டும் பொழுது, ஒன்றுக்கு மற்றொன்று எதிராகஉள்ள இரு சுருள்களைச் சேர்க்கும் கோட்டிற்கும் சுருள் ஆரம் முதலில் உலோகத்தைத் தொடும் இடத்திற் கிடையே அளக்கப்படும் கோணம்.