பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

அதிபரவளைவைக் கொடுப்பது.

16. தர்க்கம்

தர்க்கம் என்றால் என்ன? ஒன்றைச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வருங் கலை. மெய்யறிவியலின் ஒரு பிரிவு. கணக்கோடு நெருங்கிய தொடர்புள்ளது. வாய்வியல், அளவியல் என்றுங் கூறலாம். தோராயம் என்றால் என்ன? துல்லியத்தை எட்டும் நிலை. கிட்டத்தட்டச் சரியான முடிவுக்கு வருதல். இதன் இரு வகைகள் யாவை? 1. அடுத்தடுத்த தோராயம். 2. தோராயத் தொகையாக்கல். அடுத்தடுத்த தோராயம் என்றால் என்ன? ஒன்றன்பின் மற்றொன்று நடைபெறுவது. தோராயத் தொகையாக்கல் என்றால் என்ன? வளைகோட்டின் கீழுள்ள பரப்பைத் தோராயமாகக் கணக்கிடும் முறை. இதற்கு அதன் சிறிய ஆயத் தொலைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். சிக்கல் என்றால் என்ன? முடிவு காண வேண்டிய ஒன்று. தீர்வு என்றால் என்ன? சிக்கலுக்குரிய முடிவு. மாறியின் மதிப்பு. இயற்கணிதச் சமன்பாட்டினை நிறைவுறச் செய்வது. எ-டு: 2x+ 4 = 12 என்பதின் தீர்வு x=4. ஒரு சமன்பாடு ஒன்றிற்கு மேற்பட்ட தீர்வைக் கொண்டிருக்கலாம். எ-டு: x = 16 தீர்வு 2 x=-4,x=44. பொதுத் தீர்வு என்றால் என்ன? ஒரு சமன்பாட்டுக்குரிய பொதுவான தீர்வு. அதிலுள்ள மாறிகளுக்கிடையே உள்ள உறவுகள் பற்றிப் பயனுள்ள