பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

நிகழ்தகவுக் கொள்கையின் வரம்பென்ன? கடும் கணித முன்னறிவிற்கு இக்கொள்கை உதவும். ஒரு தனியாளைப் பொறுத்தவரை அது முழு உறுதியை அளிக்காது. இக்கொள்கையின் வரம்பை தாமஸ் ஹக்கிரி எவ்வாறு விளக்குகிறார்? குரங்குகள் சிலவற்றிற்குத் தட்டச்சுப் பொறிகளைக் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்குரிய தாளையும் கொடுப்போம். அவை தட்டச்சுப் பொறியை இயக்கினால், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ள எல்லா நூல்களையும் மீண்டும் அச்சிட்டுத் தரும். இக்கொள்கைப் பயன்பாட்டிற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக. 1. அணுக்களின் பரிதியங்களில் மின்னணுக்கள் நடத்தையை முன்கூட்டிக் கூறுதல். 2. ஒரு புதுவழியில் செல்லும் உந்துவண்டிகளில் எண்ணிக்கையை முன்கூட்டிக் கூறுதல். இதனால் அவை செல்வதற்குரிய நெடுஞ்சாலை அளவு, அதை அமைக்கும் செலவு ஆகியவற்றை மதிப்பிடலாம். 3. காற்று முதலிய இயற்கை ஆற்றல்களுக்கு உட்படும் பாலங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏற்றும் சுமை பற்றிக் கூறலாம். 4. ஒரு குறிப்பிட்ட பொருளை விற்கும் ஒரு நிலையத்தின் தொழில்நிலையைக் கூற இயலும். 5.ஒரு நாட்டு குடிமக்கள் சம்பாதிப்புகள் எவ்வளவு என்று கூறலாம். இதிலிருந்து வரிக்குறைப்பு எவ்வளவு செய்ய லாம் என்றும் முடிவு செய்யலாம். - 6. அமைப்புப் பொறிஇயல், செயற்பாட்டுப் பகுப்பு ஆகியவை புதுத்துறைகள். இவை ஒரு தொழிலின் மொத்த நடத்தையை வெளிக்காட்டுபவை. இவை எல்லாம் நிகழ்தகவுக் கொள்கையை நம்பி இருப்பவை. 7. எதிர்காலத் தொழில்நுட்பப் பயன்பாடும் இக்கொள் கையை நம்பி இருப்பதே.