பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

நியூட்டனும், இலய்பினிட்சும் தனித்தனியாக 1669 இல் இத்துறையைப் புனைந்தனர். 
37. அவர்கள் இதைப் புனையக் காரணம் என்ன?
பொருள்கள் இயக்கத்திலுள்ள பொழுது பல சிக்கல்கள் எழுந்தன. பல சிக்கலான விசைகள் அவற்றிற்குக் காரணமாய் இருந்தன. புவி மற்றும் திங்களின் இயக்கங்கள் புவிக்ர்ப்பு நிலையில் ஒன்றுக்கு மற்றொன்று பல சிக்கல்களை உருவாக்கின. இதில் கதிரவனின் செல்வாக்கும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாயிற்று. இதற்கு நுண்கணிதத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். புவி தொடர்பான பல சிக்கல்களுக்குத் தீர்வுகாண அவை உதவின. கணித முறைமையில் ஏற்பட்ட மிகப் பெரும் முன்னேற்றங்களில் இது ஒன்றாகும்.
38. ஒளிஇயல் கணக்கு (optical arithmetic) என்றால் என்ன?
ஒளிக்குறிகள் மூலம் கணக்கிடுதலை ஆராயுந் துறை. இதில் இயைபு, நினைவகம், அணிப் பெருக்கல் முதலிய அடிப்படைச் செயல்களில் நடைபெறுபவை.
39. கூடுகைக் கணிதம் (Combinatorics) என்றால் என்ன?
திட்டமான கணங்களில் (sets) அமையும் தனிப்பட்ட கணித உறுப்புகளின் (elements) அமைவு, ஒழுங்கு ஆகியவை பற்றி ஆராயும் புதிய துறை.
40. வணிகக் கணிதம் என்றால் என்ன?
சதவீதம், வட்டி வீதம், காலமும் வேலையும் முதலிய வற்றை ஆராயுந் துறை.
41. கணக்கு அறிவியல் (maths science) என்றால் என்ன?
அறிவியலைக் கணக்கு முறையில் ஆராயும் புதிய அறிவுத் துறை. குறிப்பாகக் கொள்கை நிலை இயற்பியலை ஆராய்வது. இதில் கணித மேதை இராமானுஜத்தின் பங்குக் குறிப்பிடத்தக்கது. இதில் அல்லாடி கிருஷ்ண சாமியும் வல்லவர்.
42. புள்ளியியல் என்றால் என்ன? ஆய்வுகள் செய்யத் திட்டமிடும் முறைகள். தகவல் பெறுதல், அதைப் பகுத்தல், அதிலிருந்து முடிவுகளைப்