20
2. பக்டர் முல்லர் நீள்சாராப் பகுப்பு மற்றும் அதன் பயன் பாடுகள் என்னுந் துறையில் சிறந்த பணி ஆற்றியவர். இவ்விருவரும் ஸ்காட்லாந்து ஹெரியட்வாட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் 1992இல் ஐரோப்பாவில் தலைசிறந்த கணித அறிஞர்கள் பதின்மர் என்னும் தலைப்பில் வழங்கப்பட்ட பரிசுகளை இவர்கள் இருவரும் பெற்றனர். -
2. இயற்கணிதம்
இயற்கணிதம் என்றால் என்ன? குறிக்கணிதம். எண் கணிதச் செயல்கள், மாறிகள் அல்லது எண்களாகக் குறிக்கப் பயன்படும் குறியீடுகளை ஆராயும் கணக்குப் பிரிவு. பொதுவாக, இது கணித முழுமைகளையும் (அணிகள், கணங்கள்), செயல்களை யும் (கூட்டல், கழித்தல்), கணித முழுமைகளுக்கிடையே உள்ள உறவிற்கான முறையான விதிகளையும் கொண்டது. பூல் இயற்கணிதம் என்றால் என்ன? 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜார்ஜ் பூல் என்னும் கணித மேதையால் உருவாக்கப்பட்டது. மெய் அல்லது பொய்யான முறையமை ஆணைகளைச் சுருக்கெழுத்தில் கணிப்பொறியில் அமைக்கும் முறை. இயற்கணிதத்தை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குக. 3x(4+2)=(3x4)+(3x2). இது எண் கணிதம் சார்ந்தது; குறிப்பிட்ட எண்களுக்கு மட்டும் பயன்படுவது. ஆனால், x(y+2)=xy+xz. இச்சமன்பாடு இயற்கணிதத்தில் ஒரு கோவை.
இயற்கணிதத்தின் வகைகள் யாவை? தொடக்க இயற்கணிதம், பொது இயற்கணிதம், அணி இயற்கணிதம், திசைச்சாரி இயற்கணிதம், பூல் இயற் கணிதம் எனப் பலவகை. நுண்இயற்கணிதம் என்றால் என்ன? இது பண்புதொகுஇயற்கணிதம். சில வெளிப்படை உண்மைகளுக்குரிய கணங்களை ஆராய்வது.