பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


6. தொடக்க இயற்கணிதம் என்றால் என்ன?
சமன்பாடுகளை வசதியான வடிவத்தில் கையாளும் முறைகளை இது கூறுகிறது.

7. உயர்நிலை இயற்கணிதம் என்றால் என்ன?
இதில் அணி இயற்கணிதம், திசைச்சாரி இயற்கணிதம், பூல் இயற்கணிதம் அகியவை அடங்கும்.

8. அணி இயற்கணிதம் என்றால் என்ன?
அணிகளுக்கிடையே உள்ள உறவுகளை இது ஆராய்வது.

9. திசைச்சாரி இயற்கணிதம் என்றால் என்ன?
இது திசைச்சாரிகளை ஆராய்வது.

10. இயற்கணித வடிவியல் என்றால் என்ன?
வடிவ கணிதத்தைக் குறியீடுகளில் விளக்குவது.

11. இயற்கணிதக் கோவை என்றால் என்ன?
கோவைகளில் ஒரு வகை.

12. இயற்கணிதச் சார்பலன் என்றால் என்ன?
இயற்கணிதச் செயல்களை ஒரு முடிவெண்ணால் வரையறை செய்வது. இதில் மூலப் பிரிப்பும் அடங்கும். எ-டு. இரு பல்லுறுப்புக் கோவைகளின் ஈவு ஓர் இயற்கணிதச் சார்பலனே. ஆனால், சைன் எக்ஸ் அப்படியன்று.

13. இயற்கணித எண் என்றால் என்ன?
வீதமுறுகெழுக்களைக் கொண்ட பல்லுறுப்புக் கோவையின் சமன்பாட்டின் மூலம்.

14. இயற்கணிதக் கூட்டுத்தொகை என்றால் என்ன?
குறியீடுகளின் கூட்டுத்தொகை.

15. இயற்கணிதக் குறியீடுகள் யாவை?
பொதுவாக, ஆங்கில எழுத்துகளே. எ-டு. a,b,c,x,y,...

16. இயற்கணிதமுறை என்றால் என்ன?
இதில் கணமும் ஈருறுப்புக் கோவையும் அடங்கும்.

3. கணிதக் கருவிகள்

1. மணிச்சட்டம் என்றால் என்ன?
பொதுக் கணிதத்தில் எண்ணுவதற்குப் பயன்படும்