பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


கருவியமைப்பு. மணிகளாலானது. கணிப்பொறிக்கு முன்னோடி இன்னும் பயன்படுவது. முதல் கணக்கிடுங் கருவி.

2. கூட்டும் பொறி என்றால் என்ன?
கூட்டிப் பார்ப்பதற்குரிய கருவி.

3. கவராயம் என்றால் என்ன?
வட்டம் வரையப் பயன்படும் கருவி. சிறிதாகவும் பெரிதாகவும் இருப்பது.

4. கோல் கவராயம் என்றால் என்ன?
கவராயத்தில் ஒரு வகை. பெரிய வட்டங்கள் வரையப் பயன்படுவது.

5. நேப்பியர் போன்ஸ் என்றால் என்ன?
ஸ்காட்லாந்து கணிதமேதையான நேப்பியர் கூட்டல், கழித்தல், வர்க்கமூலம் ஆகியவற்றைக் கணக்கிட உதவும் கருவியை புனைந்தார். இதுவே நேப்பியர் போன்ஸ் எனப்படும்.

6. கோணமானி என்றால் என்ன?
கோணத்தை அளக்கப் பயன்படுங் கருவி.

7. மூலை மட்டம் என்றால் என்ன?
ஒரு வரை கருவி. கோணங்கள் வரையப் பயன்படுவது. வடிவியல் பெட்டியில் இருப்பது.

8. வடிவியல் பெட்டி என்றால் என்ன?
கணித வரை கருவிகள் அனைத்துமுள்ள பெட்டி. அளவுகோல், கோணமானி, கவராயம் மூலை மட்டம் முதலியவை இதில் இருக்கும். வகுப்பில் கணித ஆசிரியர் அதிகம் பயன்படுத்துவது.

9. கோண அளவி என்றால் என்ன?
கோணத்தை அளக்கும் கருவி.

10. அளவுகோல் என்றால் என்ன?
நீளம், உயரம், அகலம் ஆகியவற்றை அளக்கும் கருவி. இதில் அளவுகள் அங்குலத்திலும் செண்டிமீட்டரிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். மீட்டர் அளவுகோல் பொதுவாகப் பயன்படுவது. இது அதிகம் பயன்படுங் கருவி.