பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27




27. அவர் புகழ் பெற்ற தேற்றங்கள் யாவை?
கிரேமர் - ராவ் சமமின்மை, பிஷர் - ராவ் தேற்றம், ராவ் - பிளாக்வெல்லிசேஷன்.

28. புள்ளியியலை அவர் எத்துறைகளில் பயன்படுத்தினார்?
மருத்துவம், தாவரப்பெருக்கம், உயிர் அளவை, மாந்தவியல், மரபியல்.

29. ஹேரிஷ் சந்திரா யார்? அவர் பங்களிப்பென்ன?
இந்தியாவில் பிறந்த சிறந்த கணிதமேதை. உத்திர பிரதேசத்தைச் சார்ந்தவர் இவர். 1922இல் முடிவிலிப் பருமத் தொகுதி குறிகொள்கையை (infinite dimensional group theory) உருவாக்கியவர்.

30. இக்கொள்கையின் சிறப்பு யாது?
இக்கொள்கை 1930களில் இக்கால இயற்பியலில் தோன்றியது. இவர்தம் அயரா உழைப்பால் இக்கொள்கை தற்பொழுது கணிதத்தின் எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. இத்துறைகள் வடிவ கணிதத்திலிருந்து எண்ணியல் கொள்கை வரை விரிந்து செல்பவை.

31. சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்பவர் யார்?
இராமானுஜன் போன்று சிறந்த கணித மேதை. எண்களில் ஆராய்ச்சி செய்தவர்.

32. அவர் பங்களிப்பின் சிறப்பு யாது?
மேல் நாடுகளில் 300 ஆண்டுகளாக யாராலும் தீர்க்க முடியாத ஒரு சிக்கலான கணக்கை எளிதில் தீர்த்து வைத்தவர். இவர்தம் அறிவுத் திறமையைக் கேள்வியுற்ற ஐன்ஸ்டீன் விமானப் பயணச் சீட்டை அனுப்பித் தம் நாட்டுக்கு வருமாறு அழைத்தார். இவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டு புறப்பட்டார். ஆனால், தீவினைப் பயனாக விமானம் சகாரா பாலைவனத்தின் வழியே சென்றபொழுது, விழுந்து நொறுங்கியது. இவரும் உயிரிழந்தார் (1901-1950). திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்தவர்.

33. 361 ஆண்டு பழமையுள்ள கணிதப் புதிர் யாது? இதற்குத் தீர்வு கூறியவர் யார்?