பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53.

54.

55.

56.

57.

58.

35

இவ்விரண்டையும் பேரா. ஹார்டி இணைத்து இப்பெய ரில் இலண்டனிலுள்ள எல்லாக் கணித மேதைகளுக்கும் நகல் எடுத்து அனுப்பினார். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் அறியாத நிலையில் ஒரே வழிமுறைகளை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக, இராமானுஜத்தின் முறைகள் சுருக்கமாகவும் விடை சரியாகவும் இருந்தன. இராமானுஜனின் ஆராய்ச்சித் தாள்கள் எப்பொழுது எங்கு எவற்றில் வெளியிடப்பட்டன? 1914, 1915, 1916 ஆகிய மூன்று ஆண்டுகளில் இராமா னுஜத்தின் 12 ஆராய்ச்சித் தாள்கள் இங்கிலாந்திலுள்ள பல்வேறு கணித இதழ்களில் வெளியாயின. இராமானுஜனின் கண்டுபிடிப்புகள் எவ்விதழில் எப்பொழுது வெளியாயின? இக்கண்டுபிடிப்புகளில் சில கேள்விகள் போன்று தொகுக்கப் பெற்று பி.வி. சேஷ அய்யர் மூலமாக 1911இல் இந்தியக் கழக இதழில் வெளியாயின. இதே இதழில் அவர் சிறந்த கண்டுபிடிப்புகளான பெனவுலியின் எண்கள் 1911 டிசம்பர் இதழில் வெளியாயிற்று. இராமானுஜனுக்கு பி.ஏ. பட்டம் வழங்கிச் சிறப்பித்த பல்கலைக்கழகம் எது? கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். கணிதத் திறமை ஒன்றிற்காகவே இப்பட்டம் அளிக்கப்பட்டது. இராமானுஜன் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மொத்தம் எத்தனை? 1914-1921 வரை 21 கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். - இராமானுஜனுக்கும் ஐன்ஸ்டீனுக்கும் உள்ள ஒற்றுமை யாது? இருவரும் தம் உள்ளுணர்வால் உயரிய கண்டுபிடிப்பு களை உலகுக்கு வழங்கினர். இராமாஜன் கணிதத் திறமை பற்றி நெவல் கருத்து யாது? இவர் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு 28-1-1914 அன்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் குறிப்பிடுவதாவது: