பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66.

67.

68.

69.

70.

71.

72.

73.

37

இருந்தார் பேரா. ஜூலியன் ஹக்சிலி அவர்கள், இந்த நூற்றாண்டின் இணையற்ற கணித மேதை இராமா னுஜன் என்று கூறியதை நான் நம்புகிறேன்" இராமானுஜன் எந்த ஆண்டு இங்கிலாந்து அரசர் கழக உறுப்பினர் ஆனார்?

1918ஆம் ஆண்டில். இராமானுஜன் விருது வழங்குவது எந்த அமைப்பு? இந்தியத் தேசிய அறிவியல் கழகம் வழங்குவது. இது 1968 நவம்பர் 16 இல் நோபல் பரிசு பெற்ற சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது. இராமானுஜனிடம் குறிப்பிடத்தக்க குறிப்புச்சுவடிகள் எத்தனை இருந்தன? மூன்று குறிப்புச் சுவடிகள் இருந்தன. இராமானுஜனின் அரிய கருவூலங்கள் எவ்வாறு பாது காத்து வைக்கப்பட்டுள்ளன? இவர் பயன்படுத்திய குறிப்புச் சுவடிகளில் சில மும்பையி லுள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்திலும் சென்னைப் பல்கலைக்கழத்திலும் அரிய கருவூலங் களாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. மைய அரசு இராமனுாஜனை எவ்வாறு சிறப்பித்துள்ளது? இவர்தம் 75ஆவது பிறந்த நாளை ஒட்டிப் பேராசிரியர் சீனுவாச இராமானுஜன்அஞ்சல் தலையை அவர் உருவப் படத்துடன் வெளியிட்டது. இராமானுஜன் இதழ் எப்பொழுது யாரால் தொடங்கப் பட்டது? 1997 இல், நெதர்லாந்து குல்வார் கல்வி வெளியீட்டா ளர்கள். • . தொலைந்த குறிப்புச் சுவடியின் உருநகல் பதிப்பு எப்பொழுது வெளியாயிற்று? - 1987 டிசம்பர் 22இல் வெளியாயிற்று. (இராமானுஜன் நூற்றாண்டு விழா). இதை வெளியிட்டார் பிரதமர் இரஜீவ் காந்தி.

இதில் எத்தனை தேற்றங்கள் உள்ளன?