பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.

27.

28.

29.

30.

31.

45

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் கணிதமேதை கிராஸ்மன், அயர்லாந்து. கணிதமேதை ஆமில்டன். காலோய் என்பார் யார்? இவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரஞ்சு கணிதமேதை. தொழில்நுணுக்கப் பொருளில் குலம் என்னும் சொல்லை முதன்முதலில் இவர் பல்லுறுப்புக் கோவைகளின் தீர்வு மாற்றங்களின் வரிசைமாற்றங்களை ஆராயும் நிலையில் பயன்படுத்தியவர். - குரோனக்கர் என்பார் யார்? 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் கணிதமேதை. இவர் கூற்று: "முழு எண்களைக் கடவுள் உருவாக்கினார். மீதி யாவும் மனிதன் செயல்பாடுகளே!". கார்ல் பிரடரிக் காஸ் என்பவர் யார்? 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயல்நிலைப்பரவல் இவர் பெயரால் கால் பரவல் என்று கூறப்பெறுவது. ஒரே அளவின் மீள் அளவீட்டினால் ஏற்படும் பிழைகளை ஆராய்ந்து அதிலிருந்து இதற்குரிய சமன்பாட்டை வருவித்தார்.

இலாப்லாஸ் என்பார் யார்? 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணிதமேதை. இயல்நிலை வளைவரையின் கணிதச் சமன்பாட்டை மீண்டும் கண்டறிந்து இயற்கை அறிவியல், சமூக அறிவியல் இரண்டிலும் அதைப் பயன்படுத்தியவர். ஜார்ஜ் பூல் என்பார் யார்? 19ஆம் நூற்றாண்டின் (1815 1864) கணிதமேதை. இவர் பெயரில் அமைந்த இயற்கணிதம் கணிப்பொறியின் உயிர்நாடி - ஜெர்மன் கணிதமேதை ஜார்ஜ் கேண்டரின் அரும்பணி யாது? கனங்களைப் பற்றி முதலில் அறிமுகப்படுத்தியவர்

இவரே (1845-1918). குலங்களின் இயல்புகளையும் அவற்

றிற்குள்ள தொடர்புகளையும் கணங்களைக் கொண்டு அறிய இயலும் என்று மெய்ப்பித்தார். தவிரப் பல் வகைப்பட்ட மாறிகளைக் கொண்டு சமன்பாடுகளைத்