பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105.

106.

107.

108,

109.

110.

111.

112.

60

எண்கோடு என்றால் என்ன? ஒரு நேரான கிடைமட்டக்கோடு. இதில் ஒவ்வொரு புள்ளியும் மெய் எண்ணைக் குறிக்கும். அலகுத் தொலை வுக்கு அப்பால் குறிக்கப்படும் புள்ளிகள் முழுக்கள் ஆகும்.

சமச்சீர் என்றால் என்ன? ஒர் அடிப்படைக் கருத்து. சமமாக அல்லது போல அமைதல் என்பது பொருள். இயற்பியல், வேதியியல், கணக்கு உயிரியல் ஆகிய அறிவியல்களில் பயன்படுவது. ஒரு திண்பொருளின் சமச்சீர் என்றால் என்ன? ஒரு திண் பொருளில் சமச்சீர் என்பது ஒன்று-ஒன்று தொலைவாகும். பொருள் தன்னுள் பிணைவைதக் காப்பது. எ-டு. T(P)=P,TC)= Q என்றால் d(P,o)=d (Po) ஒரு சமப்பக்க முக்கோணத்தின் சமச்சீர்கள் என்றால் என்ன? ஒரு சமபக்கமுக்கோணம் மூன்று சுழல் சமச்சீர்களையும் மூன்று அச்சு எதிரொளிப்புச் சமச்சீர்களையும் கொண்டது.

சதுரத்தின் சமச்சீர்கள் என்றால் என்ன? 1,2,3,4 என்பவை சதுரத்தின் முனைப் புள்ளிகளாக இருக்கட்டும். சதுரத்தை அதன் தளத்தில் அமையும்

மையத்தில் 90,180, 27 360 கொள்ளுமாறு கடிகாரத்

திசையில் சுற்றினால், அச்சதுரம் நான்கு சுழல் சமச்சீர் களைக் கொண்டிருக்கும். சமச்சீரற்றது என்றால் என்ன? ஓர் உரு அல்லது பகுதியை இரண்டாகச் சரிசமமாகப் பிரிக்க இயலாத நிலை. இவ்விரு பகுதிகளும் ஒன்றுக்கு மற்றொன்று ஆடி பிம்பங்கள். எ-டு. R என்னும் எழுத்து சமச்சீரற்றது.

துல்லியத்தின் சிறப்பு யாது? ஒர் அளவைக் குறிக்கும் எண்ணிலுள்ள சிறப்பு இலக்கங் கள், 2212 மீ. கணக்கு முதலிய துல்லிய அறிவியல்களில் மிக இன்றியமையாதது. பரவளைவு வடிவம் எங்கெங்குப் பயன்படுகிறது?