பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113.

114.

115.

116.

61

பரவளைவுப் பரப்புகள் தொலைநோக்கி ஆடிகளிலும் துருவு விளக்குகளிலும் கதிர்வீச்சு அடுப்புகளிலும் உலை களிலும் பயன்படுகிறது. இவற்றின் குவிக்கும் பண்பே இதற்கு காரணம். பரவளைவு என்றால் என்ன? மையப் பிறழ்ச்சி 1 உள்ள கூம்பு வளைவரை இயக்கு வரைக்குச் செங்கோணத்தில் அமையும் குவியத்தின் வழியாகச் செல்லும் அச்சைச் சுற்றி வளைகோடு சமச் சீராக இருக்கும். இவ்வச்சு உச்சியில் பரவளைவை வெட்டும்.அச்சுக்குச் செங்குத்தாகவுள்ள குவியம் வழியே உள்ள நாண் பரவளைவின் செவ்வகலம் ஆகும். கார்ட்டீசியன் ஆயங்கள் ஒரு சமன்பாட்டினால் பரவளைவு குறிக்கப்படலாம்.

y' = 4ax இவ்வடிவத்தில் தொடக்கப் புள்ளியில் உச்சி இருக்கும். x-அச்சு சமச்சீர் அச்சு. அதிபரவளைவு என்றால் என்ன? 1க்கு மேற்பட்ட பிறழ்ச்சியுள்ள கூம்பு வரை. இது இரு கிளைகளையும் இரு சமச்சீர் அச்சுகளையுங் கொண்டது. அதிபர வளைவுச் சார்புகள் என்றால் என்ன? முக்கோன அளவுச் சார்புகளில் சில வழிகளில் ஒன்றாக இருக்கும் சார்புகள் அதிபர வளைவுச் சைன், அதிபர வளைவுக் கோசைன் எனப் பெயர் பெறுபவை. இவை அதிபரவளைவுடன் தொடர்பு கொண்டவை. பருமன் (டைமன்சன் என்றால் என்ன? 1. ஒரு கோடு, வடிவம் அல்லது கன உருவத்தில் புள்ளி களைக் குறிக்கத் தேவைப்படும் ஆயங்களின் எண் னிக்கை. தள உருவம் இரு பருமன் கொண்டது. கன உருவம் முப்பருமன் கொண்டது. மிக நுண்ணிய ஆய்வுகளில் n பரும இடங்கள் பயன்படும். 2. தள உருவம் அல்லது கன உருவத்தின் அளவு. ஒரு செவ்வ கத்தின் பருமன்கள் அதன் நீளமும் அகலமும் ஆகும். 3. அடிப்படை இயற்பியல் அளவுகளில் ஒன்று. ஏனைய