பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196.

197.

198.

199.

200.

201.

202.

205.

204.

205.

71

100 சதுர மீட்டர். பரப்பின் மெட்ரிக் அலகு. பரப்பு என்றால் என்ன? ஒரு தள உருவம் அல்லது பகுதியின் விரிவு. வர்க்கமாக்கப்பட்ட நீள அலகுகளில் அளக்கப்படுவது. எஸ்ஐ அலகு சதுர மீட்டர், m தளம் என்றால் என்ன? தட்டைப் பரப்பு. உண்மை அல்லது கற்பனை. இதில் இரு புள்ளிகள் அப்பரப்பில் அமையும் ஒரு நேர்க் கோட்டால் சேர்க்கப்படும். தளவடிவியல் என்றால் என்ன? ஒரே தளத்தில் அமையும் வளைகோடு. கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றிற்கிடையே உள்ள உறவுகளை ஆராய்வது.

செவ்வகம் என்றால் என்ன? ஒரு நாற்கரத்தில் நான்கு கோணங்களும் அனைத்துச் சமமாக இருந்தால், அந்நாற்கரம் ஒரு செவ்வகம் ஆகும். கூம்பகம் என்றால் என்ன? ஒரு கன உருவம். இது ஒரு பல கோணமாகும். இதன் வகைகள் யாவை? 1. செங்கோணக் கூம்பகம். 2. சாய்கூம்பகம். 3. ஒழுங்குக் கூம்பகம்.

ஆரம் என்றால் என்ன? ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து அதன் பரிதியின் ஏதாவது ஒரு புள்ளிக்கு உள்ள தொலைவு. குறி . முதல்வரை (evolute) என்றால் என்ன? வளைகோட்டிலுள்ள எல்லாப் புள்ளிகளின் வளைவு மையங்களின் திட்ட வழி (லோகஸ்), கொடுக்கப்பட்ட வளைகோட்டின் முதல்வரை என்பதாகும். சாய்கரம் என்றால் என்ன? ஒர் இணைகரம். இது சாய்சதுரமன்று செவ்வகமுமன்று. சாய்சதுரம் என்றால் என்ன? ஒரு நாற்கரத்தில் நான்கு பக்கங்களும் அனைத்துச் சமமாக இருந்தால், அந்நாற்கரம் ஒரு செவ்வகமாகும்.