பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222.

223.

224.

225.

226.

227.

228.

74

பெருமப் புள்ளி என்றால் என்ன? சார்பு வரைபடப் புள்ளி.

நீளம் என்றால் என்ன? கன உருவம், தள உருவம், கோடு ஆகியவற்றின் நெடுக அமையும் தொலைவு. செவ்வகத்தில் இரு பருமன்களில் மிகப் பெரியதாக இருப்பது வழக்கமாக நீளம் என்றும் சிறியதாக இருப்பது அகலம் என்றும் கூறப்படும். பருமன் பகுப்பு என்றால் என்ன? இயற்பியல் அளவுகளின் பருமன்களை அவற்றிற் கிடையே உள்ள உறவுகளைச்சளி பார்க்கப் பயன்படுவது. ஐன்ஸ்டீன் சமன்பாடு E=mc சரி பார்க்கப் படலாம். தவிர, ஒர் அளவின் அலகுகளைப் பெறவும் புதிய சமன்பாடுகளைத் தேற்றமாகக் கூறவும் இப்பகுப்பு பயன்படும்.

இருபருமன் என்றால் என்ன? நீளமும் அகலமும் கொண்ட வட்டங்கள், சதுரங்கள், நீள் வட்டங்கள் முதலிய தட்டை வடிவங்கள் இரு மாறிகளைப் பயன்படுத்தி ஓர் ஆயத் தொகுதியில் வண்ணனை செய்யப்படலாம். எ-டு.x-அச்சு, y-அச்சுடன் கூடிய இரு பருமக் கார்ட்டீசியன் ஆயங்கள். முப்பருமன் என்றால் என்ன? நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி, ஓர் ஆயத் தொகுதியில் முப்பரும உருவத்தை விளக்க இயலும். எ-டு. x-அச்சு, y- அச்சு z-அச்சு ஆகியவை கொண்ட முப்பருமக் கார்ட்டீசியன் ஆயங்கள். இணை என்றால் என்ன? ஒரேதிசையில் விரிந்து தொலைவுக்கு அப்பால் நிலைப்பது. எ-டு. இணைகோடு. - இணைக்கோட்டின் பண்புகள் யாவை? ஒரு தளத்தில் அமைந்து வெட்டிக் கொள்ளாத இரு கோடுகள் இணைகோடுகள் ஆகும். 2. ஒரு கோடும் அதன் மீது அமையாத புள்ளி ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தால், கொடுக்கப்பட்ட கோட்டிற்கு