பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229.

230.

231.

252.

75

அப்புள்ளி வழியே செல்லும் இணைகோடு ஒன்றே ஒன்றுதான் உண்டு - யூக்ளிட்டின் இணைகோடு. 2. ஒரு கோடும் அதன் மீது அமையாத ஒரு புள்ளியும் கொடுக்கப்பட்டிருந்தால், அப்புள்ளி வழியே அக்கோட்டிற்கு இணையாக உள்ள கோடுகள் ஒன்றுக்கு மேல் உண்டு. எனவே, எண்ணிலடங்காப் பல கோடுகள் உண்டு - லோபோசெவஸ்கி போல்யா, கவுஸ். சுற்றளவு என்றால் என்ன? ஒரு தள உருவத்தின் முனையைச் சுற்றியுளள்ள தொலைவு. எ-டு. ஒரு செவ்வகத்தின் சுற்றளவு இரண்டு நீளமும் அகலமும் சேர்ந்தது ஆகும். ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் பரிதியாகும்.

வில் என்றால் என்ன? ஒரு தொடர் வளைகோட்டின் பகுதி. ஒரு வட்டத்தின் பரிதி. இது சமமற்ற பகுதிகளாகப் பிரிக்கப்படுமானால், சிறிய பகுதி சிறு வில். பெரிய பகுதி பெரிய வில். இதன் வகைகள் யாவை?

1. வில் கோசெகண்ட் 2. வில் கோசெக். 3. வில் கோஷ். 4. வில் கோசைன். 5. வில் கோடெஜண்ட் 6. வில் செக் 7. வில் சைன். 8. வில்சின்.

9. வில் தொடுகோடு. வளைதளம் (torus) என்றால் என்ன? வட்ட வளையம் அல்லது நங்கூர வளையம். தன்னுள் துளைகளைக் கொண்ட ஒரு மூடிய வளைபரப்பைக் கொண்டது. டயரின் உட்குழாய் போன்றது. வட்டத்தைப் போலவே ஒரே தளத்தில் அமையும். ஓர் அச்சைச் சுற்றி ஒரு வட்டத்தைச் சுழற்றி இதை உண்டாக்கலாம்.

இதன் கனஅளவு = 4Rdr.

இதன் மேற்பரப்பு = 3rd. இங்கு r என்பது உருவாக்கும் வட்ட ஆரம். d என்பது மையத் தொலைவு.