பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98



ஒத்த எண்களில் நிறப்புரிகள் இல்லாத நிலை. அவற்றின் முழுஎண் ஒற்றைப்படை தொகுதியின் மடங்காக அமையாது. குன்றல் பிரிவில் நிறப்புரிகள் பிரியாததால் இந்நிலை ஏற்படுகிறது. எ-டு ஊமத்தை வகை.

52. அல்சிதல்மை என்றால் என்ன?

குன்றல் பிரிவு மாற்றமுறுவதில், வழக்கத்திற்கு மாறான எண்ணிக்கையில் சிதல்கள் உண்டாதல். ஒவ்வொரு சிதல் தாயணுவிலும் நான்கிற்குப் பதில் இரண்டு சிதல்கள் தோன்றும். எ-டு. சிங்கப்பல் இலைத் தாவரம்.

53. தன்பன்மயம் என்றால் என்ன?

ஒரு வகைப் பன்மயம். இதில் ஒரு தனிவகை உயிரியிலிருந்து நிறப்புரித் தொகுதிகள் பெருக்கமடைதல். இழைப்பிரிவு அல்லது குன்றல் பிரிவில் ஏற்படும் தவறினால் தனிப் பன்மங்கள் உண்டாகின்றன. இதனால் ஒருமப் பாலணுக்களைவிட இருமப் பாலணுக்களே உண்டாகும்.

54. தன்னிருமம் (ஆட்டோடிப்ளாய்டு) என்றால் என்ன?

ஒற்றைப்படை நிறப்புரிகளைக் காட்டிலும் இரட்டைப் படை நிறப்புரிகளைக் கொண்ட பாலணு. இத்தகைய பாலணுக்கள் தவறான குன்றல் பிரிவினாலும் அல்லது நான்மத் திசுக்களிலிருந்தும் உண்டாக வழியுண்டு.

55. டிஎன்ஏ என்பது யாது?

இதன் விரிவு டிஆக்சிரிபோ நியூக்ளிகக்காடி என்பதாகும். நிறப்புரிகளில் முதன்மையாகக் காணப்படும் உட்கருகாடி.

56. இதன் அமைப்பை எந்த மாதிரி நன்கு விளக்குகிறது?

வாட்சன் - கிரிக் மாதிரி.

57. டிஎன்ஏ தொடராக்கம் என்றால் என்ன?

இதன்மூலம் மரபணுக்களிலுள்ள செய்தி என்ன என்பதை அறிய இயலும். இதைப் புனைந்தவர் டாக்டர் மாக்கம் கில்பர்ட் (அமெரிக்கா), டாக்டர் சேங்கர் (இங்கிலாந்து).

58. வாட்சன் கிரிக் மாதிரியை விளக்குக.

டி.என்.ஏவின் அமைப்பு மாதிரி. இது இரட்டைத் திருகுச்சுருள் வடிவத்தில் உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட