பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99



மாதிரி, அமெரிக்க உயிரிய வேதிஇயலார் ஜேம்ஸ் வாட்சனும் (1928-) பிரிட்டிஷ் உயிரியல் வேதியியலார் பிரான்சிஸ் கிரிக்கும் (1916-) 1953இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உறுதிசெய்த மாதிரி, இரு சுருள்களும் பாஸ்பேட் - சர்க்கரைத் தொடர்புகளைக் குறிப்பவை. இச்சுருள்களைச் சேர்ப்பவை பியூரைன் பைரிமிடின் இணைகள் ஆகும்.

59. ரிபோஸ் என்பது யாது?

இது ஒருவகைச் சர்க்கரை, ஆர்என்ஏவில் உள்ளது.

60. டீஆக்சிரிபோஸ் என்பது யாது?

இதுவும் ஒருவகைச் சர்க்கரை டிஎன்ஏவில் உள்ளது.

61. ரிபோசோம் என்றால் என்ன?

எல்லா உயிரணுக்களிலும் காணப்படுகின்ற நுண்ணுறுப்பு. புரதத்தொகுப்பு நடைபெறுமிடம். இதிலுள்ள ஆர்என்ஏ ரிபோசோம் ஆர்என்ஏ.

62. ஆர்என்ஏ என்றால் என்ன?

ரிபோ உட்கருகாடி கண்ணறைக் கணியத்தில் முதன்மையாக உள்ளது.

63. இதன் வகைகள் யாவை? தூது ஆர்என்ஏ, ரிபோசோம் ஆர்என்ஏ, மாற்றும் ஆர்என்ஏ.

64. உயிரியாக்கம் என்றால் என்ன? மூலக்கூறுகளின் பகர்ப்பாக உயிரிகள் தோன்றுகின்றன. உயிரிலித் தோற்றத்தில் ஓர் எல்லைக்கல். டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகிய இரண்டு விந்தை வேதிப்பொருள்களும் தாமே பெருகக் கூடியவை.

65. நியுக்கிளியோசைடு என்றால் என்ன?

ஓர் அரிய மூலக்கூறு. பியூரின் அல்லது பிரிமிடின் மூலங்கள் கொண்டது. இம்மூலம் ரிபோஸ் அல்லது டீ ஆக்சிரிபோஸ் சர்க்கரையோடு சேர்ந்திருக்கும். எ-டு. அடினோசைன், சைட்டோசின்) கானோசைன், தைமிடின், பியூரிடின்.

66. சடுதிமாற்றம் என்றால் என்ன?