பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103



பயிர்ப்பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுபவை. பயிர் நோய்களை அழிப்பவை.

19. மரபணுமாற்றம் பெற்ற தாவரங்கள் யாவை?

தக்காளி, கரும்பு, அரிசி.

20. மரபணு மாற்றத் தாவரத் தொடர்பாகவுள்ள தேசிய அறிவுரைக் குழுவின் பரிந்துரை என்ன?

மரபணு மாற்றத் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு தேசிய ஆணையம் அமைக்க வேண்டும் என்று மைய அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது. மரபணு மாற்றம் பெற்ற உயிரிகள் பாதுகாப்பிற்காகவும் ஒழுக்க நிலைப்பாட்டிற்காகவும் இது தேவை என வற்புறுத்தியுள்ளது.

21. இத்தேசிய அறிவுரைக்குழுவை அமைத்தவர் யார்?

வேளாண் அறிஞர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்.

22. உயிரிகொள்ளை என்பது என்ன?

ஒரு நாட்டுக்கே சொந்தமான ஒரு பயிரை அல்லது அதன் பொருளை மற்றொரு நாடு தனதாக்கிக் கொண்டு ஆதாயம் பெறுதல். எ-டு. வேம்பும் அதன் பொருளும்.

23. கொல் தொழில்நுட்பம் (terminator technology) என்றால் என்ன?

மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம். பெறும் மரபணு மாற்றம் ஒரு பயிர் இயல்பாக வளர வாய்ப்பளிக்கும். ஆனால், அதன் விதைகள் முளைப்பதைத் தடுக்கும். இது ஒரு கொடுமையான தொழில் நுட்பம். இது உலகில் ஒரு சில பெரும்புள்ளிகளின் கைகளில் உள்ளது

24. உயிரிவேற்றுமை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அமைப்புகள் யாவை?

இந்திய விலங்கியல் அளவையகம், இந்தியத் தாவரவியல் அளவையகம், இந்தியக் காட்டியல் அளவையகம்.

25. உயிரிவேற்றுமைப் பேரவையின் நோக்கமென்ன?

1992இல் உலக அளவில் ரியோ புவி உச்சிமாநாட்டில் 150 நாடுகள் கலந்து கொண்டன. அவற்றில் இந்தியாவும் ஒன்று, உயிர் வேற்றுமையைப் பாதுகாப்பது இப்பேர-