பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104



வையின் நோக்கம்.

26. இந்திய காட்டுயிர்ப் பாதுகாப்பு நிறுவனம் செய்துள்ள அரும்பணி யாது?

இந்தியாவை 10 உயிரிமண்டலங்களாக 1992இல் பிரித்தது.

27. அம்மண்டலங்கள் யாவை?

1. இமாலயப் பகுதிகள்
2. இமாலயக் கடப்புப் பகுதிகள்
3. பாலைவனம்
4. மேற்குத் தொடர்ச்சி மலை
5. தக்காணப்பகுதி
6. கங்கைச் சமவெளி
7. வட - கிழக்கு இந்தியா
8. அரைவறட்சிப் பகுதிகள்
9. தீவுகள்
10. கடற்கரைகள்.

28. இந்தியாவில் ஓர் உயிரியல் சிறப்பு யாது?

உயிரி வேற்றுமைக்கு நிலைக்களமாக உள்ளது.

29. இந்தியாவிலுள்ள மாவடைகளும் மரவடைகளும் யாவை?

விலங்கினங்கள் 75,000, தாவர இனங்கள் 45,000.

30. நுண்ணுயிர் மாசு என்றால் என்ன?

உயிர்த் தொழில் நுட்ப இயலின் விளைவு. தீங்குதரும் நுண்ணுயிர்களை வடிவமைத்து அவற்றைக் கொண்டு உயிர்களிடையே நோய்களை உண்டாக்கலாம். நீரை மாசுபடுத்தலாம்.

31. நெல் மீன் பண்ணை என்றால் என்ன?

பண்ணையில் ஒரு வகை, வேறுபட்ட பயிரிடலை அனு மதிப்பது. முதலீட்டு இடர்களைக் குறைப்பது. மழையுள்ள தாழ்நிலைச் சாகுபடியில் இச்செலவு குறையும். சூழ்நிலைத் தொகுதியைப் பாதுகாப்பது.

32. அனைத்துலகப் பயிர் அறிவியல் பேரவையின் சிறப்பென்ன?

முதல் பேரவை 1992இல் அமெரிக்காவில் நடந்தது. உலகின் சிறந்த 222 அறிவியலார் இதில் கலந்து கொண்டு 100 ஆராய்ச்சி உரைகள் வழங்கினர். சூழ்நிலையின்