பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அறிவியல் வினா விடை

தாவரவியல்


1. அறிமுகம்

1. உயிரியல் என்றால் என்ன?

எல்லா உயிர் வகைளையும் ஆராயும் அடிப்படை அறிவியல் உயிரியல் ஆகும்.

2. இதன் மூன்று பிரிவுகள் யாவை?

தாவரவியல், விலங்கியல், உடலியல்.

3. தாவரவியலின் இரு அடிப்படைப் பிரிவுகள் யாவை?

அடிப்படைத் தாவரவியல்.
பயன்படு தாவரவியல்.

4. தாவரவியலின் பல பிரிவுகள் யாவை?

1. உருவியல் - புறத்தோற்றத்தை ஆராய்வது.
2. திசுவியல் - உள்ளமைப்பை உருவாக்கும் திசுக்களை ஆராய்வது.
3. உடலியல் - தாவர உடலிலுள்ள உறுப்புகள் அவற்றின் செயல்கள் ஆகியவற்றை ஆராய்வது.
4. வகைப்பாட்டியல் - தாவரங்களை வகைப்படுத்துவதை ஆராய்வது.
5. சூழ்நிலை இயல் - தாவரங்கள் சூழ்நிலைத் தொடர்பாக ஆராயுந்துறை.
6. தாவரப் புவிஇயல் - தாவரங்கள் உலகில் பரவியுள்ளதை ஆராயுந்துறை.
7. தொல்பொருள் தாவரவியல் - தொல்பொருள்களான உயிர்களின் புதை வடிவங்களை ஆராயுந்துறை.
8. மரபணுவியல் - தாவரங்கள் கால்வழி பற்றி ஆராய்வது.

5. பயன்படுதாவரவியலின் பல துறைகள் யாவை?

1. தோட்டக்கலை.
2. வேளாண்மை.