பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108



சென்றன. சில நாட்களுக்குள் கருவுறுதல் நடைபெற்றது; மகரந்தக்குழல் விந்தணுக்களை சூல்களின் சூல் உறைகள் விடுவித்தன. விளைபொருள் விதை, இந்த ஆய்வுக்குழாயில் இயற்கையில் நடைபெற்றதை விடக் கருவுறுதல் விரைவாக நடைபெற்றது. இங்கு விதையுறக்கம் என்பது நீங்கி விட்டது. இயற்கையில் உள்ளது போலவே கருவும் முளைசூழ்த்தசையும் உண்டாயின.



22. வேளாண் அறிஞர் சுவாமிநாதன்

1. சுவாமிநாதனின் முழுப் பெயர் என்ன?

மன்கோம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்.

2. சுவாமிநாதன் எங்கு எப்பொழுது பிறந்தார்?

கும்பகோணத்தில் 1925 ஆகஸ்ட் 7 இல் பிறந்தார்.

3. தொடக்கக் கல்வியை எங்குக் கற்றார்?

தமிழ்நாட்டில் கற்றார்.

4. எப்பொழுது முனைவர் பட்டப்படிப்பை முடித்தார்?

1952இல் கேம்பிரிட்ஜ் வேளாண் பள்ளியில் பட்டம் பெற்றார்.

5. அவர்தம் 20 ஆண்டுக்கால ஆராய்ச்சியை எங்குச் செய்தார்?

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் செய்தார்.

6. அவர்தம் அருஞ்செயல்கள் யாவை?

1. அதிக விளைச்சல் தரும் பல கோதுமை வகைகளை உருவாக்கினார். உருளைக்கிழங்கிலும் சணல் வகைகளிலும் செய்வதற்குக் கடினமான கலப்பினங்களைச் செய்தார்.
2. சிறந்த நிர்வாகி; சமூகத் தொண்டர்.
3. அவர் உருவாக்கிய பல திட்டங்களின் பயன்களை உழவர்கள் தங்கள் வயல்களில் நுகர்கின்றார்கள்.
4. வேளாண் உற்பத்தியை உயர்த்தப் பல முறைகளையும் நுட்பங்களையும் வகுத்துள்ளார்.

7. அவர் உணர்ந்தது என்ன?