பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111


வேலையில்லாப் பொருளாதார வளர்ச்சியின் ஒரு கட்டமே உலகம் தழுவியதாக்கல்.

20. அவர் வற்புறுத்தும் ஓர் இன்றியமையா உண்மை என்ன?

உடனடித் தேவை நலமுள்ள குழந்தைகளுக்குரிய உணவு. 2 வயது முடியும் பொழுது குழ்தையின் மூளை வளர்ச்சி முடிவடைகிறது. ஆகவே, இந்த வயதில் குழந்தைகளுக்கு ஊட்ட உணவு அளிப்பது மிக இன்றியமையாதது.

21. 1994இல் தாம் பரிசு பெற்ற பொழுது ஆற்றிய ஏற்புரையில் அவர் கூறியவை யாவை?

உலக உணவுப் பாதுகாப்பு முறை இடரில் உள்ளது. இதற்குச் சூழ்நிலையும் சமூகமே காரணங்கள் ஆகும். இந்த அச்சுறுத்தலை நெடிய அரசியல் பார்வையாலும் சீரிய மக்கள் செயல்திட்டத்தின் மூலமுமே போக்க இயலும்.

22. எதற்காக அவருக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது? அளித்தது யார்?

உலக உணவு-வேளாண் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜேக்குயிஸ் டயஃப். இவர் 29-4 -1999 அன்று சென்னையில் இப்பரிசை அளித்தார். வேளாண்மையில் மகளிர் பங்கு குறித்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இப்பதக்கம் வழங்கப்பட்டது.

23. 2001இல் லோகமானிய திலக் விருது பெற்ற போது அவர் கூறியவை யாவை?

ஒரு புதிய இந்தியாவின் நான்கு தூண்களைத் திலக் உருவாக்கினார். அவையாவன: அயல்நாட்டுப் பொருள் புறக்கணிப்பு, சுதேசி, தேசியக்கல்வி, சுயராஜ்யம்.

24. தமிழ்நாட்டில் சமுதாய உணவு வங்கிகள் மையம் எப்பொழுது தொடங்கப்பட்டது?

2-10-2001 இல் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

25. இம்மையத்தின் தேவைகள் யாவை?

1. சூழ்நிலை இயல்.

2. ஒழுக்கவியல்.