பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


3. வேளாண் பொறிஇயல்.
4. மருந்துத் தாவரவியல்.
5. காட்டியல்.
6. தாவரப்பெருக்கம்.

6. தாவரவியல் நெருங்கிய தொடர்புள்ள அண்மைக்கால இரு துறைகள் யாவை?

நுண்ணுயிரி இயல், மூலக்கூறு உயிரியல் உயிரி தொழில் நுட்பவியல்.

7. தாவரவியல் தொடர்புள்ள இரு அடிப்படை அறிவியல்கள் யாவை?

இயற்பியல், வேதியியல்.

8. தாவரவியலில் என்றும் நாம் நினைவில் கொள்ளத்தக்க மூன்று அறிஞர்கள் யாவர்?

லின்னேயஸ், மெண்டல், தார்வின்.

9. தாவர ஆராய்ச்சிக்கு ஏற்ற தாவரத் தோட்டம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?

தமிழ்நாட்டில் ஊட்டியில் உள்ளது.

10. தமிழ்நாட்டில் உப்பிடவாழ்தாவரங்கள் எங்குள்ளன?

பறங்கிப்பேட்டைக்கு அருகிலுள்ள பிச்சாவரம்.

11. மிதவை உயிர்கள் என்றால் என்ன?

இவை நுண்ணுயிர்கள்; மீன்களுக்கு உணவு.

12. தாவரம் என்றால் என்ன?

ஒரே இடத்தில் நிலைத்து வாழ்ந்து தன்னுடைய உணவைத் தானே தயாரித்துக் கொள்வது தாவரம் ஆகும்.

13. தாவரங்கள் இடம் பெயருமா?

தாவரங்கள் இடம் பெயரா. கிளமிடோ மோனஸ், சில குச்சி வடிவ உயிர்கள் தங்கள் கசை இழைகளால் ஒரளவுக்கு நகர்ந்து செல்லக் கூடியவை.

14. தாவரத்தில் மிக உயரமானது எது?

அசோகமரம்.

15. தாவரத்தில் மிகச் சிறியது எது?

கிளமிடோமோனாஸ்.