பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118


8.பிளாஸ்மோடியம் மலேரியாவை உண்டாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சார்லஸ் லேவரன் 1907இல் பெற்றார்.

9.தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பால் எச்ரிலிச், ஐ.ஐ. மக்னிகோ ஆகிய இருவரும் 1908இல் பெற்றனர்.

10. கண்ணறை வேதியியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆல்பிரக்ட் கோசல் 1910இல் நோபல் பரிசு பெற்றார்.

11. காதிலுள்ள முன்றில் என்னும் பகுதியின் நோய்த்தன்மை, செயற்பாடு ஆகிய இரண்டையும் ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1914இல் இராபர்ட் பாரனி என்பார் பெற்றார்.

12. தாவரப் பச்சைய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ரிச்சர்டு வில்ஸ்டேட்டர் 1915இல் பெற்றார்.

13. தடுப்பாற்றல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜூல்ஸ் பார்டெட் 1919இல் பெற்றார்.

14. தசையில் பால்காடி வளர்சிதைமாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஆட்டோ பிரிட்ஸ் மெயர்ஹாஃபி, ஹில் ஆகிய இருவரும் 1922இல் பெற்றனர்.

15. இன்சுலின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1923இல் சர் பிரடரிக் கிராண்ட்பேண்டிங், ஜே.ஜே.ஆர். மாக்லியாடு ஆகிய இருவரும் பெற்றனர்.

16. ஸ்பைராப்டிரா கார்சினோமா என்னும் நச்சுயிரைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜோகான்ஸ் ஆண்ட்ரியாஸ் பைபிஜர் 1926இல் நோபல்