பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119


பரிசு பெற்றார்.

17. பித்தநீர்க்காடிகளின் இயைபை அறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1927இல் ஆட்டோ ஹெயின்ரிச் வீலேண்டு 1927இல் நோபல் பரிசு பெற்றார்.

18. டைபஸ் காய்ச்சல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சார்லஸ் ஜூல்ஸ் ஹென்றி நிக்கோலி 1928இல் பெற்றார்.

19. நொதிகள், சர்க்கரை நொதித்தல் ஆகியவற்றிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1929இல் சர் ஹார்டன் ஆர்தர், யூலர் செல்பின் ஆகிய இருவரும் பெற்றனர்.

20. நரம்பு நோய் நீக்கம் வைட்டமின்களைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

கிறிஸ்டியன் எய்ஜக்மன், ஹாப்கின்ஸ் ஆகிய இருவரும் 1929இல் பெற்றனர்.

21. ஈமின், பச்சையம் ஆகிய இருபொருள்களையும் ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹென்ஸ் பிஷர் 1930இல் பெற்றார்.

22. மூச்சுநொதி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆட்டோ ஹெயின்ரிச் வார்பர்க் 1931இல் பெற்றார்.

23. நரம்பணு ஆராய்ச்சிக்காகப் பரிசுபெற்றவர்கள் யார்?

1932இல் கோமகன் எட்கர் டவுக்லாஸ் ஆண்ட்ரியன், சர் சார்லஸ் ஸ்காட்ஷெரிங்டன் ஆகிய இருவரும் பெற்றனர்.

24. நிறப்புரி மரபுவழிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

தாமஸ் ஹண்ட மார்கன் 1933இல் பெற்றார்.

25. எதிர்ப்புப் பொருள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினட், விப்பிள், மர்பி ஆகிய மூவரும் பெற்றனர்.