பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123


சர் ஆண்ட்ரு பீல்டிங் அக்சிலி, எக்கிளிஸ், ஹாட்கின் ஆகிய மூவரும் 1963இல் பெற்றனர்.

54. கொழுப்புக்காடி வளர்சிதைமாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

கொன்ராட் பிளாச், லைனஜம் ஆகிய இருவரும் 1964இல் பெற்றனர்.

55. நச்சுயிர் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பிரான்காய்ஸ் ஜேக்கப், லவேஃப், ஜே. மோனாட் ஆகிய மூவரும் 1965இல் பெற்றனர்.

56. டீடீடியின் உயர்திறனை விளக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பால் ஹெர்மன் முல்லர் 1965இல் நோபல் பரிசுபெற்றார்.

57. கட்டி நச்சுயிர்களைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பேடன் பிரான்சிஸ் ரூஸ், ஹக்கின்ஸ் ஆகிய இருவரும் 1966 இல் பெற்றனர்.

58. மரபுக் குறித்தொகுதியை விளக்கியதற்காக நோபல் பரிசுபெற்றவர்கள் யார்?

இராபர்ட் டபுள்யூ ஹாலி, கொரோனா, நிரன்பர்க் ஆகிய மூவரும் 1968இல் பெற்றனர்.

59. மரபணு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

டாக்டர் சால்வடார் லூரியா, டெல்பிரக், ஹேர்ஷே ஆகிய மூவரும் 1969 இல் பெற்றனர்.

60. நச்சுயிர்களின் மரபமைப்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர்கள் யார்?

டாக்டர் டி. ஆல்பிரட் ஹெர்ஷே, எஸ்.ஈ. லூரியா, எம். டெல்பிராக் ஆகிய மூவரும் 1969 இல் பெற்றனர்.

61. சர்க்கரை நியுகிளியேடைடுகளை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

லூயி லெலாயர் 1970இல் பெற்றார்.

62. நரம்பு முனைகளின் நீர்மச் செலுத்திகளை ஆராய்ந்ததற்