பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


16. உலகில் உள்ள தாவரச் சிறப்பினங்கள் எத்தனை?

சுமார் 4,00,000.

17. அதிகம் பரவி வளர்ந்து நிழல் தரக்கூடிய மரம் எது?

ஆலமரம்.

18. தாவரங்களில் சிறந்த விளைவையும் பயனையும் தரக் கூடியவை எவை?

நெல் முதலிய தானியப் பயிர்கள்.

section end="1"/>

2. உயிரி தொழில் நுட்பவியல்

1. உயிரி தொழில் நுட்பவியல் என்றால் என்ன?

உயிரிகள் உருவாக்கும் பொருள்களைப் புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு அதிக அளவில் உருவாக்கிக் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்வதை ஆராயுந் துறை. எ-டு. பாசுமதி அரிசி.

2. உயிரி தொழில்நுட்பஇயலில் பயன்படும் நுட்பங்கள் யாவை?

படியாக்கம், நொதித்தல், கண்ணறை இணைவு, கருமாற்றம், ஆர்டிஎன்ஏ தொழில்நுட்பம், திசுவளர்ப்பு, கண்ணறை வளர்ப்பு முதலியவை ஆகும்.

3. உயிரி தொழில்நுட்பவியலின் வகைகள் யாவை?

தாவர உயிரி தொழில் நுட்பவியல், விலங்கு உயிரி தொழில் நுட்பவியல்.

4. உயிரி தொழில் நுட்பவியல் இந்தியாவில் உரிய பலன்களைத் தந்துள்ளதா? ஏன்?

இல்லை. 1956 முதல் 1998 வரை 950 கோடி செலவு செய்துவிட்டு அதிலிருந்து பெற்ற தொழில்நுட்பம் 1 1/2 கோடி ரூபாய்க்கே சமமானது. 40 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின், 24 தொழில் நுட்பங்களே நமக்குக் கிடைத்துள்ளன.

5. உயிரி தொழில் நுட்பவியலில் பயன்படும் துறைகள் யாவை?

மருந்தியல், உணவுப்பதனம், தாவர உற்பத்தி, சூழ்நிலை மேலாண்மை.