பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12




6. உயிரி தொழில் நுட்பத் துறைக்காக விருது பெற்ற இந்தியப் பெண் அறிவியலார் மூவர் யார்? எப்பொழுது பெற்றனர்?

1. டாக்டர் பாம்ஜி, அய்தராபாத் டாங்கேரியா. அறநிறுவனம் ரூ. 1,00,000.
. டாக்டர் இலக்குமி, டாக்டர் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம், சென்னை, ரூ. 50,000.
3. டாக்டர் குரோவர், இந்தியத் தேசியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், கர்னால், ரூ.50,000. இம்மூவரில் இவரே இளையவர். இவர்கள் விருது பெற்ற ஆண்டு 2001.

7. உயிரி தொழில் நுட்பவியலின் வாழ்க்கைப் பயன்கள் யாவை?

1. நடைமுறைக்கேற்ற வேளாண்மையை மேற்கொள்ளல். புதிய பயிர் வகைகளை உருவாக்கல்
2. உலகளாவிய உணவுப் பாதுகாப்பைப் பெறுதல்; பயிர்களைப் பாதுகாத்தல்.
3. மனித உடல் நலத்தைப் பெருக்கல்.
4. உழவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுதல்.
5. தாவரங்களிலிருந்து தடுப்பு மருந்துகளை உண்டாக்கலாம் - டிஎன்ஏ ஆவைன்.
6. நுண்பெருக்கம் மூலம் குறிப்பிட்ட தாவரங்களைப் பெரிய அளவில் பெருக்குதல்.
7. ஊட்ட உணவு வழங்குதல்.

8. உயிரி தொழில் நுட்பவியல் எவ்வாறு சிறப்பிக்கப் படுகிறது?

புத்தாயிரம் உயிரி தொழில் நுட்ப ஆண்டு எனச் சிறப்பிக்கப்படுகிறது.


3. தண்டு

1. தாவர அச்சு என்றால் என்ன?

தாவர மைய அச்சு. இதில் தண்டும் வேரும் இருக்கும்.