பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


7. ஆணிவேர் மாற்றுருக்கள் யாவை?

1. கூம்பு வடிவம் - கேரட்

2. கதிர் வடிவம் - முள்ளங்கி.

3. கூர் வடிவம் - பீட்டுக்கிழங்கு.

8. வேற்றிட வேர் மாற்றுருக்கள் யாவை?

1. கொத்துவேர் - தண்ணீர் விட்டான்கிழங்கு

2. முடிச்சுவேர் - மாங்காய் இஞ்சி.

3. அங்கை வடிவ வேர் - ஏப்னேரியா.

4. மணிமாலை வடிவ வேர் - டயஸ்கோரியா.

5. தூண்வேர் - ஆலம்விழுது.

6. பற்றுவேர் - மரத்தாழை.

7. மூச்சுவேர் - கண்டல்.

8. ஒளிச்சேர்க்கை வேர் - டேனியோபில்லம்.

9. முட்டுவேர் - தாழை.

9. உண்ணக்கூடிய ஆணிவேர்க் கிழங்குகள் யாவை?

கேரட், பீட்ரூட், மரவள்ளிக்கிழங்கு.

10. தூண்வேர் என்பது யாது?

ஆலமரக் கிளையைத் தாங்கும் ஆலம் விழுது. காற்றில் தொங்குவது.இது ஒரு வேற்றிட வேர். தண்டுக்குக் கூடுதல் தாங்குதல் அளிப்பது.

11. வேற்றிட வேர்கள் என்றால் என்ன?

இயல்பான இடத்திலிருந்து அல்லாமல் வேறு இடத்தில் வளரும் வேர்கள். ஆலம் விழுது தண்டிலிருந்து தோன்றுவது.

12. வேற்றிட வேர்த்தாவரங்களுக்கு சில எடுத்துக் காட்டுகள் தருக.

1. கொத்துவேர் - தண்ணீர்விட்டான்கிழங்கு

2. முடிச்சு வேர் - மாங்காய் இஞ்சி.

3. பற்று வேர் - மரத்தாழை.

4. மூச்சுவேர் - கண்டல்.

5. முட்டுவேர் - தாழை.

6. ஒளிச்சேர்க்கை வேர் - டேனியோபில்லம்.

13. வேர்முண்டு என்பது யாது? இதன் சிறப்பென்ன?

அவரைக் குடும்பத் தாவரங்களில் வேர்முண்டுகள் உண்டு.