பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


இவற்றில் குச்சி வடிவ உயிர்கள் வாழ்ந்து நைட்ரஜன் கூட்டுப் பொருளை உண்டாக்குகின்றன. தங்களுக்கு வேண்டிய மாப்பொருளைத் தாவரத்திலிருந்து பெறுகின்றன. எ-டு. ரைசாபியியம் என்னும் குச்சி வடிவ உயிரி.

14. குடிநீருக்கு நறுமணமளிக்க அதில் போடும் வேர் யாது?

விளாமுச்சி வேர்.

15. தலையில் அணிந்து கொள்ளக்கூடிய வேர் எது?

வெட்டி வேர்.

5. இலை

1. இலை என்றால் என்ன?

காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சி. விரிந்த பரப்புள்ளது. தாவரத்தின் தொழிற்சாலை.

2. இலைநுனியின் வகைகள் யாவை?

1. கூர் நுனி - மாவிலை.

2. நீள்கூர் நுனி - அரசிலை.

3. கொம்பு நுனி - செம்பருத்தி.

4. பள்ள நுனி - இப்போமியா.

5. மழுங்கு நுனி - ஆல் இலை.

6. மைய நரம்பு நீள்நுனி - ஆவாரைச் சிற்றிலை.

7. குழி நுனி - புன்னை இலை.

3. இலைப்பரப்பெண் என்றால் என்ன?

தாவர அடிப்பரப்பிற்கும் தாவர இலைகளின் மொத்தப் பரப்பிற்கும் இடையே உள்ள வீதம்.


4. இலை விளிம்பின் நுனிகள் யாவை?


1. முழு விளிம்பு - ஆல்.

2. நுனிப்பல் விளிம்பு - குப்பைமேனி.

3. வெளிப்பல் விளிம்பு - அல்லி

4. அலை விளிம்பு - நெட்டிலிங்கம்.

5. கூம்பு விளிம்பு - கஞ்சா.

6. பிரிவிளம்பு - ஆமணக்கு.

2