பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


5. இலையின் வடிவங்கள் யாவை?

1. நீள் வடிவம் - புல்.

2. ஈட்டி வடிவம் - அரளி.

3. நீள்வட்ட வடிவம் - பலா

4. தலைகீழ் ஈட்டி வடிவம் - கரும்பு.

5. நீள் சதுர வடிவம் - வாழை.

6. முட்டை வடிவம் - ஆல்.

7. தலைகீழ் முட்டை வடிவம் - தேக்கு

8. இதய வடிவம் - பூவரசு.


6. இலைப்பரப்பு என்றால் என்ன?

இலைத்தாளே இலைப் பரப்பு.


7. இலைப்பரப்பின் மாற்றுருக்கள் யாவை?

1. இலைப்பை - உட்ரிகுலேரியா.

2. கொக்கிகள் - பிகோனியா.

3. இலை முட்கள் - இலந்தை.

4. இலைப் பற்றுக்கம்பிகள் - பட்டாணி.

5. இலைக்குடம் - நெபன்தஸ்.

6. செதில் இலைகள் - சப்பாத்தி.

7. சேமிப்பிலைகள் - சோற்றுக் கற்றாழை.


8. இலைப்பரப்பின் வகைகள் யாவை?

1. பளபளப்பான பரப்பு - மாவிலை.

2. குறுமயிரிழைப் பரப்பு - செம்பருத்தி.

3. நெடுமயிரிழைப் பரப்பு - எப்பரோசியா.

4. கரட்டுப் பரப்பு - தும்பை.

5. சுரப்பிப் பரப்பு - அட்ரோபா.


9. இலை நய வகைகள் யாவை?

1. சாறுள்ள நயம் - கத்தாழை.

2. தோல் நயம் - ஆல்.

3. விறை நயம் - சிசிலியா

4. நெகிழ் நயம் - துத்தி.


10. இலை நரம்பமைவு என்றால் என்ன?

இலையில் நரம்புகள் அமைந்திருக்கும் முறை.


11. இதன் வகைகள் யாவை?