பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


1.வலைப் பின்னல் நரம்பமைவு மாவிலை.

2. இணைப் போக்கு நரம்பமைவு - இஞ்சி.

12. வலைப் பின்னல் நரம்பமைவின் வகைகள் யாவை?

1. இறகு வலைப் பின்னல் நரம்பமைவு - மாவிலை.

2. அங்கை வலைப் பின்னல் நரம்பமைவு - ஆமணக்கு

13. இணைப்போக்கு நரம்பமைவின் வகைகள் யாவை?

1. இறகு இணைப்போக்கு நரம்பமைவு - இஞ்சி.

2. அங்கை இணைப் போக்கு நரம்பமைவு - மூங்கில்.


14. இலையின் முதன்மையான மூன்று வகைகள் யாவை?

1. தனி இலை பூவரசு

2. கூட்டிலை - முருங்கை.

3. சிறப்பிலைகள் - வெங்காயம்.


15. தனி இலை என்றால் என்ன?

ஒரே காம்பும் ஒரே இலைபரப்பும் கிளைக்காமல் கணுவில் பொருந்தி இருத்தல். எ-டு. செம்மருத்தி.


16. கூட்டிலை என்றால் என்ன?

முதன்மைக் காம்பிலிருந்து கிளைக் காம்புகள் சென்று அவற்றில் இலை இருக்கும். எ-டு. அவரை இலை.


17. அங்கைக் கூட்டிலையின் வகைகள் யாவை?

1. ஒரு சிற்றிலைக் கூட்டிலை - எலுமிச்சை.

2. இரு சிற்றிலைக் கூட்டிலை - பிகோனியா.

3. முச்சிற்றிலைக் கூட்டிலை - வில்வ இலை.

4. நாச்சிற்றலைக் கூட்டிலை - ஆக்சாலிஸ்.

5. பல சிற்றிலைக் கூட்டிலை - இலவ இலை.


18. சிறப்பிலைகளின் வகைகள் யாவை?

1. செதில் இலைகள் - வெங்காயம்.

2. வித்திலைகள் - விதை இலைகள்.

3. செதில்கள் - செம்பருத்தி.

4. பூவிலைகள் - அல்லிபுல்லி.

5. தண்டிலைகள் - பொது இலைகள்.


19. கூட்டிலையின் மூன்று வகைகள் யாவை?

1. சிறகுக் கூட்டிலை - கருவேல் இலை.

2. அங்கைக் கூட்டிலை - எலுமிச்சை