பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


ஒரு பூவில் அதன் பகுதிகள் அமைந்திருக்கும் முறை.


4. இதன் வகைகள் யாவை?

1. சுழலமைவு - பூவரசு.

2. அரைச் சுழலமைவு - நுணா

3. சுருளமைவு - கள்ளி.


5. இதழமைவு என்றால் என்ன?

பூ மொட்டில் இதழ்கள் அமைந்திருக்கும் முறை. இதழ்கள் என்பவை புல்லிகளையும் அல்லிகளையும் குறிக்கும்.


6. இதன் வகைகள் யாவை?

1. அடுக்கமைவு - புலிநகக் கொன்றை.

2. சுழலமைவு - செம்பருத்தி.

3. தொடு அமைவு - வெங்காயம்.


7. இதழ்வட்டம் என்பது யாது?

புல்லி வட்டமும் அல்லி வட்டமும் சேர்ந்த பகுதி. மகரந்தத் தாள்களை மூடியிருக்கும். எ-டு. தென்னை.


8. உண்ணக்கூடிய இதழ்வட்டம் எது?

பலாச்சுளை.


9. புல்லிவட்டம் என்றால் என்ன?

ஒரு பூவின் முதலடுக்கு. பச்சை நிறமுள்ள புல்லிகளால் ஆனது. ஒளிச்சேர்க்கை நடத்துவது மட்டுமல்லாமல் பூவிற்குப் பாதுகாப்பும் அளிப்பது.


10. அல்லிவட்டம் என்றால் என்ன?

பூவின் இரண்டாம் அடுக்கு. இதில் அல்லிகள் நிறம் உள்ளதாக இருக்கும். இவ்வட்டம் தன் உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பளிப்பது. நிறங்களால் பூச்சிகளைக் கவர்வது.


11. அவரையின் அல்லிகளைக் கூறு?

இதன் மிகப் பெரிய தனித்த அல்லி கொடியல்லி. இது சிறகல்லிகள் இரண்டையும் படஅல்லிகள் இரண்டையும் தன்னுள் கொண்டிருக்கும் ஆக அல்லிகள் 5.


12. மகரந்தவட்டம் என்றால் என்ன?