பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


மகரந்தத்தூள், மகரந்தப்பை முதலியவற்றைக் கொண்ட பூவின் மூன்றாம் வட்டம். பயனுறு உறுப்பான ஆண் உறுப்பு.

13. சூல்வட்டம் என்றால் என்ன?

பூவின் நான்காம் வட்டம். இது பெண்பகுதி. சூல்பை, சூல்தண்டு, சூல்முடி ஆகியவற்றைக் கொண்டது. முதிர்ந்த சூல் விதை. முதிர்ந்த சூல்பை காய்.

14. பூவின் பால்பரவல் வகைகள் யாவை?

1. இருபால் பூ - பூவரசு.

2. ஒருபால் பூ - தென்னை.

3. ஒரில்லப் பூ - ஆமணக்கு.

4. ஈரில்லப்பூ - தென்னை.

5. கலவைப்பூ - மா

6. நிறைவுள்ள பூ - செம்பருத்தி.

7. நிறைவற்ற பூ - கிளிமேட்டிஸ் பூ

15. பூத்தளம் என்றால் என்ன? பூக்காம்பின் விரிந்த பகுதி. இதில் பூப்பகுதிகள் பொருந்தி உள்ளன

16. பூத்தளமாற்றுருக்கள் யாவை?

1. உருளை வடிவ வடிவம் - மைக்கீலியா.

2. கூம்பு வடிவம் - அனோனா.

3. குழாய் வடிவம் - தாமரை.

4. கிண்ண வடிவம் - காட்டுரோஜா.

5. வட்டுவடிவம் - ஆரஞ்சு

17. பூப்படம் என்றால் என்ன?

ஒரு பூவின் அமைப்பை எளிதாக அறியப் பயன்படும் படம். வகைப்பாட்டியியலில் சிறப்பிடம் பெறுவது.

18. பூ வாய்பாடு என்றால் என்ன?

ஒரு பூவின் பல பகுதிகளையும் தெளிவாகக் காட்டும் வாய்பாடு. எ-டு. K(5) C5A (9)+1 G1

K(5) புல்லிகள் 5. இணைந்தவை.

C5 அல்லிகள் 5. இணையாதவை.