பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


A9)+1 மகரந்தத்தாளாக 9 இணைந்தும் 1 தனித்தும் உள்ளவை.

G1 ஓரறைச் சூல்பை.

இங்குக் குறிக்கப்பட்டிருப்பது அவரைப்பூ வாய்பாடு.

19. பூக்குந்தாவர ஊழி என்றால் என்ன?

முன் கேம்பிரியன் ஊழி முடிந்தபின் உள்ள காலம். அறிந்தறியக்கூடிய தொல்படிவுகளைப் பாறைகள் கொண்ட காலம்.

20. மகரந்தப்பை என்றால் என்ன?

மகரந்தத்தாளுக்கு மேலுள்ள பகுதி. மகரந்தத்தூளை உண்டாக்குவது. இத்தூளில் ஆண் அணுக்கள் இருக்கும்.

21. மகரந்தப்பையின் இணைப்பு வகைகள் யாவை?

1. முதுகொட்டிய மகரந்தப்பை - நீரல்லி.

2. அடி ஒட்டிய மகரந்தப்பை - கத்தரி.

3. நடு ஒட்டிய மகரந்தப்பை - புல்.

22. மகரந்தப்பை பிளவுறும் வகைகள் யாவை?

1. நீள் பிளவு - பூவரசு.

2. துளைப் பிளவு - சொலானம்.

3. திறப்பிப் பிளவு - பார்பெரி.

4. குறுக்குப் பிளவு- தும்பை.

23. மகரந்த இழை வடிவங்கள் யாவை?

1. கரளை வடிவம் - தாலிக்ட்ரம்.

2. அல்லிய இழை - அல்லி.

3. கிளைப்பிழை - ஆமணக்கு.

24. மகரந்தப்பையின் வகைகள் யாவை?

1. உள்நோக்கு மகரந்தப்பை - நீரல்லி.

2. வெளிநோக்கு மகரந்தப்பை - அல்லி.

25. மகரந்தச்சேர்க்கை என்றால் என்ன?

மகரந்தப்பையிலுள்ள மகரந்த்தூள் சூல்முடியை அடைதலுக்கு மகரந்தச்சேர்க்கை என்று பெயர். இந்நிகழ்ச்சி கருவுறுதலுக்கு முந்தியது.

26. மகரந்தச்சேர்க்கைக் காரணிகள் யாவை?

1. நீர் மகரந்தச் சேர்க்கை - வேலிசினேரியா.