பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


2. காற்று மகரந்தச் சேர்க்கை - நெல்.

3. விலங்கு மகரந்தச் சேர்க்கை - ரோஜா.

4. வெளவால் மகரந்தச் சேர்க்கை -

5. பறவை மகரந்தச் சேர்க்கை - பாம்பாக்ஸ்

6. நத்தை மகரந்தச் சேர்க்கை

7. பூச்சி மகரந்தச் சேர்க்கை - அத்தி.

27. மகரந்தச் சேர்க்கையின் வகைகள் யாவை?

1. தன் மகரந்தச்சோக்கை - வாழை.

2. அயல் மகரந்தச் சேர்க்கை - நெல்.

28. இவ்விரண்டில் சிறந்தது எது?

அயல்மகரந்தச் சேர்க்கை.

29. அயல் மகரந்தச் சேர்க்கைக்குரிய காரணிகள் யாவை?

1. பால் தன்மை - தென்னை.

2. இருபருவம் - கொத்துமல்லி

3. மகரந்தமுன் முதிர்ச்சி - செம்பருத்தி.

4. சூலக முன் முதிர்ச்சி - சோளம்.

5. தன்மலடு - துத்தி

6. அயல் மகரந்த வீறு - அவரை.

7. தற்தடுப்பு - நித்திய கல்யாணி.

8. சூல்தண்டு வேறுபடுதல் - ஆச்சாலில்

30. ஒட்டி இணைந்தது என்பது எதைக் குறிக்கின்றது?

மகரந்த இழையே அதன் தொகுப்போ மகரந்தப்பையின் பின்புறம் முழுவதும் பொருந்தி இருக்கும், சண்பகப்பூ.

31. மகரந்தத்தாள் என்றால் என்ன?

தாவர ஆண் இனப்பெருக்க உறுப்பு. அவரை விதை வடிவ மகரந்தப்பையும் அதைத் தாங்கும் மகரந்த இழையும் இதில் இருக்கும்.

32. மகரந்தச் செருகலின் வகைகள் யாவை?

1. அல்லி ஒட்டியவை.

2. அல்லி ஒட்டாதவை.

33. மகரந்தத்தாள் எத்தனை வகைப்படும்?

1. ஈரிணை மகரந்தத்தாள் - தும்பை.

2. அல்நீள மகரந்தத்தாள் - கடுகு