பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


34. மகரந்தத்தாள் ஒன்றிப்பின் வகைகள் யாவை?

1. ஒற்றைமுடி மகரந்தம் - பூவரசு.

2. இரட்டைமுடி மகரந்தம் - கிளைட்டோரியோ.

3. பலமுடி மகரந்தம் - பாம்பாக்ஸ்.

4. குழாய் அமை மகரந்தம் - சூரியகாந்திப்பூ

35. பகுதி வேற்றுமை என்றால் என்ன?

பூவட்டங்களில் பகுதிகள் சமமற்றிருத்தல்.

36. வேற்றிலை நிலை என்றால் என்ன?

தண்டின் வேறுபட்ட பக்கங்களில் வேறுபட்ட இலைகள் தோன்றுதல். எ-டு. லைக்கோபோடிய வகை.

37. பூவடிச்செதில் என்றால் என்ன?

இது மாறிய இலை. தன் கோணத்தில் பூவைத் தாங்குவது. பூவிற்குக் கீழ் வளர்வது.

38. பூக்காம்புச் செதில் என்றால் என்ன?

பூக்காம்பிலுள்ள சிறிய இலை.

39. பூநாடல் என்றால் என்ன?

இவ்வியல்பு பூச்சிகளுக்குண்டு. இதனால் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட வழியுண்டு.

40. பூத்தாங்கி என்றால் என்ன?

புல்லி வட்டத்திற்கும் அல்லிவட்டத்திற்கும் இடையே பூத்தளம் நீட்சியடைதல்.

41. வாழ்காலம் என்றால் என்ன?

மொட்டில் தோன்றுவதிலிருந்து விதையாகும் வரையுள்ள பூவின் காலம்.

42. பூவமைவு என்றால் என்ன?

தண்டில் பூக்கள் அமைந்திருக்கும் முறை.

43. சூல்பை என்றால் என்ன?

பூவின் பருத்த அடிப்பகுதி. இதில் சூல்கள் அமைந் திருத்தல்.

44. சூல்பை நிலையை ஒட்டி பூவின் வகைகள் யாவை?

1. மேற்சூல்பைப்பூ - பூவரசு.

2. கீழ்ச்சூல்பைப்பூ - சூரியகாந்தி.

3. அரைக்கீழ்ச்சூல்பைப்பூ - சீசல்பினியா.