பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


45. சூல் என்பது யாது?

பூக்குந் தாவரங்களின் சூல்பையில் காணப்படும் சிறு உறுப்பு. கருவுற்ற பின் விதையாக மாறுவது.

46. சூல்வளர்கரைசல் என்றால் என்ன?

தகுந்த வளர் ஊடகத்தில் நறுக்கிய சூல்களை வளர்த்துத் தாவரப் பெருக்கத்தை ஆராய்தல்.

47. சூலின் வடிவங்கள் யாவை?

1. நேர்ச்சூல் - வெற்றிலை.

2. வளைகுல் - கடுகு

3. தலைகீழ்ச்சூல் - அவரை.

4. அரைத்தலைகீழ்ச்சூல் - லெம்னா.

48. சூலொட்டு என்றால் என்ன?

சூல்கள் உள்ள ஒட்டுப் பகுதி.

49. சூலமைவு என்றால் என்ன?

சூல்பையின் தடித்த பகுதிகளுக்குச் சூலொட்டுகள் என்று பெயர். இவற்றில் சூல்கள் அமைந்துள்ள முறைக்குச் சூலமைவு என்று பெயர்.

50. சூலமைவின் வகைகள் யாவை?

1. ஓரச்சூலமைவு - அவரை.

2. அச்சுச் சூலமைவு - பூவரசு

3. கவர்ச்சூலமைவு - பாசிபுளோரா.

4. தனிச்சூலமைவு - டயான்தஸ்.

5 அடிச்சூலமைவு - நெட்டிலிங்கம்.

6. மேலெழுசூலமைவு - நீரல்லி.

51. சூலுறை என்றால் என்ன?

சூல் திசுவைச் சுற்றியுள்ள உறை. இது சூல் வெளியுறை, உள்ளுறை என இரு வகை.

52. கருவுறுதல் என்றால் என்ன?

ஆண் அணு (விந்தணு) பெண் அணுவோடு (சினை அணுவோடு) சேரும் நிகழ்ச்சி. கலவி இனப்பெருக்கம் சார்ந்தது.

53. தாவரங்களில் கருவுறுதலுக்கு முந்திய நிலை யாது?

மகரந்தச் சேர்க்கை.