பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


ஒருபால் பூக்கள், நாயுருவி.

61. குடைப் பூக்கொத்துக்கு எடுத்துக்காட்டு தருக.

வெங்காயம், கொத்துமல்லி.

62. மடல்பூக்கொத்து என்றால் என்ன?

இதில் முழுப்பூக்கொத்தும் ஒரு பெரிய பூவடிச் செதிலில் பொருந்தி இருக்கும். இதற்குப் பாளை அல்லது மடல் என்று பெயர். எ-டு. தென்னை.

63. கதிர்ப்பூக்கொத்து என்றால் என்ன?

இதில் காம்பிலாப் பூக்கள் கீழிருந்து மேல் அமைந்திருக்கும், நாயுருவி.

64. இரு பக்கச் சமச்சீர் என்றால் என்ன?

ஒர் உயிரியின் உடற் பகுதிகளின் சீரமைப்பு.இதில் இடப்பாதிகளும் வலப்பாதிகளும் ஒன்று மற்றொன்றிற்கு ஆடித்தோற்றங்களாக இருக்கும். அதாவது, ஒரு செங்குத்துக் கோட்டில் மட்டுமே உடற்பகுதிகளை இரு சமபகுதிகளால் பிரிக்கலாம். எ-டு. புலிநகக் கொன்றை.

65. ஆரச்சமச்சீர் என்றால் என்ன?

தாமரை, வெங்காயம் முதலியவை ஆரவாட்டுச் சமச்சீருள்ள பூக்கள்.

66. ஈரில்ல நிலை என்றால் என்ன?

ஆண் பெண் பூக்கள் தனித்தனித் தாவரங்களில் இருத்தல். எ-டு. பனை, தென்னை.

67. ஆண் ஒரில்லப் பூக்கள் என்றால் என்ன?

ஒருபால் பூக்களும் இருபால் பூக்களும் ஒரே தாவரத்தில் இருக்கும். எ-டு. குதிரைமரம்.

68. ஆண் உறுப்புத் தாங்கி என்றால் என்ன?

மகரந்தத் தாள்களைக் கொண்ட பூத்தள நீட்சி.

69. ஆண் ஈரில்லப் பூக்கள் என்றால் என்ன?

ஒருபால் பூக்களும் இருபால் பூக்களும் தாவரங்களில் தனித்தனியே இருத்தல், எ-டு. சதுப்புநில மேரிகோல்டு.

70. கறியாகப் பயன்படும் இரு பூக்களைக் கூறு.

வாழைப்பூ, கோசுப்பூ.