பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


7. துளைக்கனி - கஞ்சா.

8. மூடிபிரிகனி - போர்ட்டுலாகா.

9. பொய்ச்சவர்கனி - கடுகு

10. பல்பிளவுறுகனி - கொத்துமல்லி.

10. வெடியாக்கனியின் வகைகள் யாவை?

1. விதையுறைத்தனிக்கனி - கிளிமேட்டிஸ்.

2. அறைக்கனி - கீரைக்கணி.

3. மணிக்கனி - நெல்.

4. சிறகுக்கனி - வேம்பாடம்.

5. கொட்டை - முந்திரி.

11. திரள் கனி என்றால் என்ன?

பல தனிச் சூலகங்கள் உள்ள ஒருதனிப் பூவிலிருந்து இது உண்டாவது. மனோரஞ்சிதத்தில் கனிகள் தனித்திருக்கும். சீதாப்பழத்தில் கனிகள் இணைந்திருக்கும்.

12. கூட்டுக்கனி என்றால் என்ன?

இது பூக்கள் நெருங்கியமைந்த ஒரு பூத்தொகுதியிலிருந்து உண்டாவது. எல்லாக் கனிகளின் கனி உறைகளும் இணைவதால், பார்பதற்கு ஒரு கனி போன்று தெரியும். எ.டு பலாப்பழம், அன்னாசிப் பழம்.

13.கனிகளின் பயன்கள் யாவை?

1. விலங்குகளுக்கு உணவு,

2. மனிதனுக்கும் உணவாக அமைவதால், பொருளாதார சிறப்புடையவை. வாழைப்பழம், மாம்பழம்.

14. மணிக்கனிக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.

நெல். இதில் விதையுறையுடன் சூல்பைச் சுவர் சேர்ந்திருக்கும்.

15. சாற்றுக்கனி என்றால் என்ன?

கீழ்ச்சூல்பையிலிருந்து உண்டாகும் கனி, தக்காளி.

16. பிளவுறுகனிகள் என்றால் என்ன?

உலர்கனிகளின் ஒரு வகை. இவற்றில் சுவர் தெறிந்து விதைகள் வெளிவரும். இது பருப்புக்கனி. ஒரு புற வெடிகனி எனப்பலவகை. எ-டு கருவேலங்காய், எருக்கு, வெண்டை.